முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி நாயக்கனூரில் ஓ. பன்னீர் செல்வம் வெற்றி

சனிக்கிழமை, 14 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

போடி, மே.  14 - தேனி மாவட்டத்தைச் சேர்ந்த போடி நாயக்கனூரில் அ.தி.மு.க. முன் னாள் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தி.மு.க. வேட்பாளரை பின்னு க்கு தள்ளி அமோக வெற்றி பெற்று இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு -  தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெ ற்றது. இதில் தேனி மாவட்டம் போடி தொகுதியில் அ.தி.மு.க. முன் னாள் அமைச்சர் ஓ.பி.எஸ். போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு. க. சார்பில் லட்சுமணன் என்பவர் போட்டி இட்டார். 

நேற்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே முன்னாள் அமைச்சர் பன்னீர் செல்வம் முன்னிலை பெற்று வந்தார். இறுதியில் அவர் அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

தமிழகத்தின் இடைக்கால முதல் அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். இறு தியில் 95,235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் 29,906  வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளரை வீழ்த்தினார். 

வாக்கு எண்ணிக்கையின் போது, 2 -வது இடத்தைப் பிடித்த தி.மு. க வேட்பாளர் லட்சுமணன் 65,329 வாக்குகள் பெற்று இருந்தார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வீராசாமி 1,598 வாக்குகள் பெற்றார். பா. ஜ. க. வேட்பாளர் டெபாசிட்டை இழந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்