முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் கூடுதல் கடன் வாங்க எம்.பி.க்கள் சபை ஒப்புதல்

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், அக். 18 - அமெரிக்காவில் அதிபர் ஒபாமா புதிய வகை மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தார். இதற்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தர மறுத்து விட்டது. 

அமெரிக்காவில் செனட் சபை, பிரதிநிதிகள் சபை என இரு சபைகள் உள்ளன. பட்ஜெட்டுக்கு இரு சபையிலும் ஒப்புதல் பெற வேண்டும். இதில் செனட் சபையில் ஓபாமாவின் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை இல்லை. இதனால் பட்ஜெட் செனட் சபையில் வெற்றி பெற்று விட்டது. ஆனால் பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சியின் ஆதரவு கிடைக்காததால் அதை வெற்றி பெற செய்ய முடியவில்லை. 

பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காததால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியவில்லை. எனவே ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டனர். இதனால் அமெரிக்காவில் நெருக்கடி நிலவி வருகிறது. இநத் நிலையில் அமெரிக்கா வாங்கும் கடன் உச்சவரம்பையும் உயர்த்த வேண்டியதுள்ளது. இதற்கும் இரு சபைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். எனவே குடியரசு கட்சி எம்.பி.க்களின் ஆதரவை பெற ஜனநாயக கட்சி முயற்சித்தது. அதற்கு குடியரசு கட்சி சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து பிரதிநிதிகள் சபையில் நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. அதில் கூடுதல் கடன் பெற ஆதரவு தெரிவித்து எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதன் மூலம் 167 டிரில்லியன் டாலர் அளவுக்கு கடன் பெற ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த ஒப்புதல் கிடைத்ததால் அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago