முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையால் 32 காரைக்கால் மீனவர்கள் பிடிப்பு

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2013      தமிழகம்
Image Unavailable

 

காரைக்கால், அக்.19 - காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளதால் காரைக்கால் பகுதி மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:_

காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை, அன்பழகன், ஆனந்தவேல் மற்றும் பட்டினச்சேரி மீனவ கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி ஆகியோருக்கு சொந்தமான 4 விசை படகுகளில் மீன்பிடி தொழில் செய்ய காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 15_ந் தேதி இரவு புறப்பட்டு 16_ந் தேதி கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 32 பேர் மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த 38 பேரையும் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவ கிராம பஞ்சாத்து தலைவர் வீரதாஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, 40 நாள் போராட்டம் முடிந்து மீன் பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கின்றது. மத்திய_மாநில அரசுகள் மீனவர்கள் நலனில் அக்கறை காட்டவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கவும் மத்திய_மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடரும் இந்த சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டால் தான் மீனவர்கள் தங்கள் தொழிலை நிம்மதியாக செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago