முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிடிபட்ட அமெரிக்க கப்பலின் கேப்டன் உள்பட 33 பேர் கைது

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.19 - தூத்துக்குடி கடலில் ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்க கப்பலின் கேப்டன் உள்பட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளாதகவும், கப்பலில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் டி.ஜி.பி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த ''சீ மேன் கார்டு ஓகியோ'' என்ற ரோந்து கப்பலை தூத்துக்குடி அருகே இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 12_ந்தேதி மடக்கி பிடித்தனர்.

அந்த கப்பலில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன. அந்த கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் பாதுகாவலர்களிடம் இந்திய கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம் , ஐ.பி., ''கியூ'' உள்ளிட்ட மத்திய_மாநில உளவுப்பிரிவு போலீசார், உள்ள?ர் போலீசார் கூட்டாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த கப்பல் அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ''அட்வன் போர்ட்'' என்ற தனியார் மெரைன் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் என்பது தெரிய வந்தது.

அந்த கப்பலில் 35 அதிநவீன செமி ஆட்டோ மெட்டிக் துப்பாக்கிகள், 5,680 ரவுண்ட் தோட்டாக்கள் இருந்தன. பயிற்சி பெற்ற 25 பாதுகாவலர்கள், 10 கப்பல் மாலுமிகள் இருந்தனர். மாலுமிகளில் 8 பேர் இந்தியர்கள். அவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். பாதுகாவலர்கள் அனைவரும் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன், எஸ்டோனியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்.

இதையடுத்து ஆயுதங்கள் வைத்திருத்தல், அளவுக் கதிகமாக துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருத்தல், இந்திய கடல் பகுதியில் சட்டவிரோதமாக டீசல் பரிமாற்றம் செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கப்பலில் இருந்த 25 பாதுகாவலர்கள், மாலுமிகள் மீது தருவை குளம் கடலோர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் விரிவான அறிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார், அந்த கப்பலை நேரில் பார்வையிட்டு விசாரணை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் இந்த வழக்கு கடலோர காவல் படையிடம் இருந்து 'கியூ' பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

தமிழக 'கியூ'பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பவானி <ஸ்வரி கடந்த 16_ந்தேதி தூத்துக்குடி வந்தார். அவரிடம் வழக்கு தொடர்பாக ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன. கப்பல் மாலுமிகள் மற்றும் பாதுகாவலர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பவானி ஈஸ்வரி தொடர்ந்து விசாரணை நடத்தினார்.

அமெரிக்க கப்பல் விவகாரம் குறித்து மத்திய உளவுப்பிரிவான ''ரா'' அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்தனர். ''ரா'' அமைப்பின் உதவி கமிஷனர் சசிகுமார் தலைமையில் 2 கள அதிகாரிகள் முதலில் ரகசிய விசாரணை நடத்தினர்.

அந்த வழக்கு விவரங்களை கேட்டறிந்த அவர்கள், அமெரிக்க கப்பலின் மாலுமிகள் மற்றும் பாதுகாவலர்களிடமும் விசாரணை நடத்தினார்கள்.

நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் ''கியூ'' பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பவானி <ஸ்வரி தனது விசாரணையை முடித்தார். 

இதனையடுத்து கப்பலில் இருந்த 35துப்பாக்கிகள், 5,700 தோட்டாக்களை ''கியூ'' பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை தூத்துக்குடி துறை முகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புபடைக்கு சொந்தமான ஆயுதக்கிடங்கில் ஒப்படைத்தனர்.

நேற்றுகாலை 8 மணியளவில் அமெரிக்க கப்பலின் கேப்டன் டுட்னிக் வாலன்ஸ்டின், மாலுமிகள், 25 பாதுகாவலர்கள் உள்பட 34 பேரும் கைது செய்யப்பட்டனர். 

இது குறித்து டி.ஜி.பி. அலுவலகச் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:_

தூத்துக்குடி கடலோர காவல்படை துணைத்தலைவர் புகாரின் பேரில் திருபைக்குளம் காவல் நிலையத்தில் சிமென் கார்டு ஓகியோ கப்பலின் கேப்டன் மற்றும் ஊழியர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டப்படி டீசலை வாங்கியது மற்றும் ஆயுத சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கியூ பிரிவின் விசாரணையின்படி எந்தவித ஆவணங்களும் இன்றி பெருமறை ஆயுதங்கள் கப்பலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்த 35 நவீன துப்பாக்கிகள், 5680 தோட்டக்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் 150 லிட்டர் டீசலை சட்டத்துக்குப் புறம்பாக பெற்றது குறித்தும் வழக்கு பதிவு செய்யப்பட்டு 8 மாலுமிகள் மற்றும் 25 காவலர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 2 மாலுமிகளை மட்டும் கப்பல் பராமரிப்புக்காக விடப்பட்டுள்ளனர். 

இவ்வாறு டி.ஜி.பி. அலுவலக செய்திக்குறிப்பு கூறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago