முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் மாநாடு: இங்கிலாந்து எம்.பி.க்கள் எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், அக்.19 - இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்துவதற்கு இங்கிலாந்து எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற போரில் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். அங்கு காமன்வெல்த் மாநாட்டை நடத்தும் இலங்கை அரசு மீது இங்கிலாந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இலங்கையில் நடைபெற்ற போரில் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று சர்வதேச மனித உரிமை அமைப்பினர் கூறிவருகின்றனர்.  இதை இலங்கை அரசு மறுத்து வருகிறது.  அங்கு தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடப்பதாக சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.  இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொள்ளக்கூடாது என்று பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை கனடா புறக்கணிக்குகம் என்று கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் கூறியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் இதில் கலந்து கொள்கிறாரா, இல்லையா என்று இங்கிலாந்து நாடாளுமன்ற எம்பிக்கள் கேட்டனர். இதுபற்றி தெளிவான முடிவை இங்கிலாந்து இதுவரை அறிவிக்கவில்லை. இலங்கையில் காமன்வெல்தக் மாநாட்டை நடத்தக் கூடாது. அந்த பொறுப்பை இலங்கைக்கு வழங்கக் கூடாது  என்று இங்கிலாந்து எம்பி.க்கள் கூறினர்.

மாநாட்டில் கலந்து கொள்ள இளவரசர் சார்லஸ் இலங்கைக்கு செல்கிறார். இது இங்கிலாந்து அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்