முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் அமோக வெற்றி

சனிக்கிழமை, 14 மே 2011      அரசியல்
Image Unavailable

புதுச்சேரி, மே.14 - புதுவை சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மீண்டும் முதல்வராகிறார். புதுவை மாநில சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 13-ந் தேதி நடைபெற்றது. அனைத்து தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. 

புதுவை பிரதேசத்தில் உள்ள 23 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரியிலும், கராரைக்கால் பிராந்தியத்தில் உள்ள 5 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியிலும், மாகி தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை மாகி ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஏனாம் தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை மினி சிவில் ஸ்டேஷனிலும் நடைபெற்றது. 

காலை 8 மணிக்கு வாக்க எண்ணிக்கை தொடங்கியதும் முதல் கட்டமாக தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதைதொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு வாக்க பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த எண்ணிக்கை 3 சுற்றுகளாக நடந்தது. 

இதில் மாகி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட அமைச்சர் வல்சராஜ் முதல் நபராக வெற்றி பெற்றார். காமராஜர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் முதல்வர் வைத்திலிங்கமும், கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ரங்கசாமியும் வெற்றி பெற்றனர். தொடக்கத்தில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சம அளவில் தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஆனால் போகப்போக என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. 

மாலை 4 அளவில் அனைத்து தொகுதிகளின் ஓட்டுக்களும் எண்ணி முடிக்கப்பட்டது. இதில் என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி 20 கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. 

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆரம்பித்த இரண்டு மாதத்திலியே ஆட்சியை பிடித்தது குறிப்பிடதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்