முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய ரயில்வே மந்திரி பதவிக்கு கடும் போட்டி

சனிக்கிழமை, 14 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,மே.15 - மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக உள்ளார். அவர் மேற்கு வங்க முதல்வர் பொறுப்பை ஏற்க இருப்பதால் ரயில்வே மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறார். அடுத்து யார் ரயில்வே அமைச்சராவது என்பது குறித்து கடும் போட்டி நிலவி வருகிறது. 

இதற்கிடையில் ரயில்வே மந்திரி பதவியை வேறு எந்த கட்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் விட்டுக் கொடுக்காது என்றும் தெரியவந்துள்ளது. இது குறித்து மம்தா தெரிவித்ததாவது, மேற்கு வங்க முதல்வராக நான் பதவியேற்ற போதிலும் மத்திய ரயில்வே துறையை திரிணாமுல் காங்கிரஸ் தக்கவைத்துக் கொள்ளும். எங்கள் கட்சிக்கு உள்ள ஒரே கேபினட் அமைச்சர் இது மட்டும்தான். இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேசவுள்ளேன். அப்போது ரயில்வே துறை குறித்து இறுதி முடிவெடுக்கப்படும். ரயில்வே துறையில் ஏராளமான நன்மைகள் செய்ய வேண்டியதிருப்பதால் திரிணாமுல் காங்கிரஸ் அந்த துறையை தக்கவைத்து கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த நிலையில் ரயில்வே இலாக்காவை பெற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அவர்களில் முகுல்ராஜ், தினேஷ் திரிவேதி இருவருக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்