முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர்,மே.15 - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக இருந்தது. மிதமான நிலநடுக்கம் என்பதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த நிலநடுக்கம் நேற்று அதிகாலை 3.09 மணிக்கு ஏற்பட்டதாக ஸ்ரீநகரில் அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆப்கானிஸ்தானில் உள்ள மலைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2005 ம் ஆண்டு அக்டோபர் 8 ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லை பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. அப்போது அந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக இருந்தது. இதன் காரணமாக ஆயிரத்து 300 க்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்தில் சிக்கி அப்போது பலியானார்கள். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் பூகம்பம் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் பதட்டம் காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்