முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச குத்துச்சண்டை - ஜிதேந்தர் குமாருக்கு வெண்கலம்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி, மே. 15 - கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீரர்கள் ஜிதேந்தர் குமார் மற்றும் சந்தோஷ் ஹரி ஜனுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இது பற்றிய விபரம் வரு மாறு - 

ஆடவருக்கான 16 - வது எலைட் சர்வதேச குத்துச் சண்டைப் போட்டி கள் கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மாட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப் பான கட்டத்தில் உள்ளது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி நா டுகளைச் சேர்ந்த வீரர்கள் களம் இறங்கி உள்ளனர். அவர்களது தரமான சண்டையை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். 

இதன் 56 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் முனனணி வீரர்களில் ஒருவரான ஜிதேந்தர் குமாரும், டஜிகிஸ்தான் வீரர் ஜகிபோவும் மோதினார்கள். இதில் இருவரும் அபாரமாக சண்டை இட்டனர். 

இந்திய வீரரான ஜிதேந்தர் குமார் கடந்த 2009 -ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற வீரராவார். அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சர்வதேச போட்டியான இதில் பங்கேற்றார். 

முன்னதாக நடைபெற்ற முதல் சுற்றில் இந்திய வீரர் ஜிதேந்தர் வெகு நேர்த்தியாக சண்டையிட்டார். இதனால் அவர் 2 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அதன்  பிறகு டஜிக் வீரர் முன்னிலை பெற்றார். 

அடுத்து நடந்த 2 -வது சுற்றில் டஜிக் வீரர் ஜகிபோவ் 2 புள்ளிகள் கூடு தலாக பெற்றார். இதனால் 2 -வது சுற்றின் முடிவில் அவர் 3 - 2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். 

பின்பு நடந்த 3 -வது சுற்றிலும், டஜிக் வீரர் தனது முன்னிலையை தக்க வைத்தார். அடுத்து நடந்த 4 -வது சுற்றிலும் அவர் தொடர்ந்து முன்னேறினார். இறுதியில் அவர் 12 - 8 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெ ற்றார். 

இந்தப் போட்டி முடிந்த பிறகு, ஜிதேந்தர் குமார் நிருபர்களிடம் போட்டி குறித்து தெரிவித்ததாவது - இந்தப் போட்டியின் முடிவு எனக்கு அதிருப்தியை அளிக்கிறது. 

ஆனால் இந்தப் போட்டியில் நான் பங்கேற்றது திருப்தி அளிக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நான் கலந்து கொண்ட முதல் சர்வ தேசப் போட்டி இதுவாகும். தொடர்ந்து மேலும் தீவிரப்பயிற்சி எடுத்து அடுத்த போட்டிகளில் சாதனை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்