முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் நம்பிக்கையே வெற்றிக்கு காரணம் - ரங்கசாமி

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      அரசியல்
Image Unavailable

சேலம் மே.15​- மக்கள் என் ஆட்சி மீது வைத்திருந்த நம்பிக்கையே எங்கள் கூட்டணி வெற்றிக்கு காரணம் என என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமியை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உட்கட்சி சல் காரணமாக முதல்வர் பதவியில் இருந்து நிக்கயது காங்கிரஸ் கட்சி தலைமை.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிவிட்டு விலகி தேர்தல் நடைபெறும் 2 மாதங்களுக்கு முன்பு என்.ஆர்.காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியை துவக்கி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தனர்.

இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க.கூட்டணி 20 இடங்களை கைப்பற்றியுள்ளது. புதுவை முதல்வராக மீண்டும் ரங்கசாமி பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில் அவர் சேலம் ஜங்சனில் உள்ள அப்பாவு பைத்தியசுவாமி கோவிலில் நேற்று மதியம் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, புதுவையில் வெற்றி பெற்ற அக்கட்சியின் வேட்பாளர்கள் சபாபதி,சந்திரகாசு, ராஜவேலு, தியாகராஜன், அங்காளன், கார்த்திகேயன், செல்வம், பி.ஆர்.சிவா, கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், என்.ஜி.பன்னீர்செல்வம், அசோக் கண்ணன், சுயேட்சையாக வெற்றி பெற்ற வி.எம்.சி.சிவக்குமார் ஆகியோரும் அவருடன் வந்து சுவாமி கும்பிட்டனர்.

இதற்காக அங்கு சிறப்பு nullஜைகளும்,விஷேச வழிபாடுகளும் நடத்தப்பட்டன.

முன்னதாக சேலம் வந்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு சேலம் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெயவேணுகோபால், அக்ரி ஜெயபால், தனபால், செல்லத்துரை, கண்ணன், சேலம் மாவட்ட பொறுப்பாளர் வெங்கட், முருகன் உள்பட பலர் வரவேற்றனர்.

இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

கேள்வி-கட்சி துவங்கிய 2 மாதத்திலேயே உங்கள் கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளதே இதற்கு காரணம் என்ன?

பதில்-ஏற்கனவே மக்கள் என் ஆட்சி மீது வைத்திருந்த நம்பிக்கை வைத்திருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் மக்களுக்கு நல்லது செய்வோம் என்று நம்பிக்கை வைத்திருப்பதால் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.இதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம்

கேள்வி-புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி அமையுமா?

பதில்-அது ஆட்சி அமைக்கும்போது தெரியும்.கேள்வி-பதவி ஏற்பு எப்போது?பதில்-விரைவில்.இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்