முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கபாலு தீடீர் ராஜினாமா - சத்தயமூர்த்தி பவனில் அடிதடி

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மே.15 - காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை முன்னிட்டு தங்கபாலு காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தங்கபாலு ராஜினாமாவை தொடர்ந்து எதிர் கோஷ்டியனர் தங்கபாலு கோஷ்டிகளுடன் சத்தியமூர்த்தி பவனில் அடிதடி மோதலில் ஈடுபட்டனர். இதனால் சத்திய மூர்த்தி பவன் போர்க்களம் போல் காட்சி அளித்தது.​தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழக தேர்தல் முடிவை காங்கிரஸ் கட்சி தலை வணங்கி ஏற்கிறது. தமிழ் நாட்டில் தொடர்ந்து 5 ஆண்டுக்கு ஒரு தடவை ஆட்சி மாற்றம் இயல்பாக நடைபெறுகிறது. அந்த அடிப்படையில் தமிழக மக்கள் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர். காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 5 பேருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும், புதிய அரசு அமைக்கும் அ.தி.மு.க.வுக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மிகுந்த வெற்றி பெற்றது. இந்த முறை தோல்வி கண்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தோல்வியைக் கண்டு துவண்டு போகிற கட்சி அல்ல. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுவோம். 63 இடங்களில் போட்டியிட்டதில் 5 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி பொறுப்புள்ள, ஆக்கப்nullர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். 

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு தார்மீக பொறுப்பு ஏற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். எனது பதவி ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அனுப்ப உள்ளேன். 

கேள்வி:​ தோல்வி காரணமாக உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியால் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறீர்களா? 

பதில்:​ எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அன்னை சோனியா என்னை நியமித்தார். அவரது வழிகாட்டுதலின்தான் இதுவரை தலைவர் பதவியில் பணியாற்றி வந்தேன். 

காங்கிரஸ் மேலிடத்தில் என்னைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளனர். அதனால்தான் எனக்கு மூன்றாவது தடவை தலைவர் பொறுப்பை வழங்கி இருந்தனர். தேர்தல் தோல்விக்கு தனிப்பட்ட காங்கிரசை காரணம் சொல்ல முடியாது. எங்கள் கூட்டணியில் பா.ம.க. உள்பட பல கட்சிகள் இடம் பெற்றிருந்தன. எனவே தோல்விக்கு புது விளக்கம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. 

கேள்வி:​அ.தி.மு.க. வுடன் இனி காங்கிரஸ் கூட்டணி வைக்க வாய்ப்பு உருவாகுமா? 

பதில்:​ இதுபற்றி நான் கருத்து எதுவும் சொல்ல முடியாது. கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுக்க தமிழ்நாடு காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை. எந்த முடிவானாலும் சோனியாதான் அறிவிப்பார். இன்று வரை தி.மு.க.வுடனான கூட்டணி, நட்பு தொடர்கிறது. 

கேள்வி:​ ஊழல்தான் தோல்விக்கு காரணமா? 

பதில்:​தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. பல காரணங்களில் இதுவும் ஒன்று. 

இவ்வாறு கே.வி.தங்கபாலு கூறினார். 

தங்கபாலு மாநில தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த தகவல் அறிந்ததும் முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். தங்கபாலுவை பார்க்க சென்றார். ஆனால் அவரை தங்கபாலு ஆதரவாளர்கள் உள்ளே விடவில்லை. பார்க்க அனுமதிக்கவும் இல்லை. வெளியில் வந்த கராத்தே தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், தங்கபாலு எடுத்த முடிவு காலதாமானது. என்றாலும் இது நல்ல முடிவு. காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும் இந்த முடிவை கேட்டு மகிழ்ச்சி அடைவார்கள். அன்னை சோனியா நடவடிக்கை எடுத்து வெளியே அனுப்பும் முன்பு தங்கபாலு தாமாக ராஜினாமா செய்துள்ளார் என்றார்.

இதேபோல் தங்கபாலு ராஜினாமா முடிவு தெரிந்ததும் இளங்கோவன் ஆதரவாளர்கள் மணிபால் மற்ற ஆதரவாளர்கள் சத்தயமூர்த்தி பவனுக்கு வந்தனர். அப்போது அவர்களை உள்ளே நுழைய விடாமல் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் சந்திரன் தலைமையில் தடுக்க பார்த்தனர். இதனால் இரு கோஷ்டிக்கும் தள்ளுமுள்ளு தகராறு ஏற்பட்டது. அடிதடி மோதலில் தொண்டர்களின் கட்டை கிழந்தது.

பிறகு சத்தியமூர்த்தி பவனுக்குள் புகுந்த தொண்டர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசினர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. பின்பு சில நிர்வாகிகள் தலையிட்டு சமாதானப்படுத்திய பின் சத்தியமூர்த்தி பவன் அமைதியானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்