முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விக்னேஸ்வரன் அழைப்பு

வியாழக்கிழமை, 31 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, நவ. 1 - இலங்கை தலைநகரம் கொழும்புவில் அடுத்த மாதம் காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா பங்கேற்க கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பல்வேறு அமைப்புகளும் இந்த கருத்தை வலியுறுத்தி வந்தன. பிரதமரோ அல்லது இந்திய பிரதிநிதிகளோ யாரும் அதில் பங்கேற்க கூடாது என்று வற்புறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்கை யாழ்ப்பாணத்திற்கு வரும்படி வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த வடக்கு மாகாண தேர்தலில் விக்னேஸ்வரன் வெற்றி பெற்று முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை வடக்கு பகுதியில் தேர்தல் நடப்பதற்கு வற்புறுத்தியதற்காக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும், இந்தியாவுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இலங்கை போரில் தமிழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் நான் பெரும்பான்மை மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்றிருக்கிறேன். நீங்கள் இலங்கைக்கு வர வேண்டும். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்துக்கு வர வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். இதன் மூலம் தமிழரக்ள் தொடர்பான முக்கியமான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படும் என நான் கருதுகிறேன். தங்கள் வருகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதாக இருக்கும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். சமீபத்தில் வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அப்போது அவர் விக்னேஸ்வரனை சந்தித்து பேசினார். இந்த நிலையில் தான் விக்னேஸ்வரன் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்