முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் தலிபான் தலைவர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பெஷாவர், நவ.4 - அமெரிக்க ஏவுகணை தாக்குதலில்  பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹக்கிமுல்லா மசூத் உள்பட 4 பேர் பலியானார்கள். 

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்களை அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தி அழித்து வருகின்றன.  வடக்கு வசிரிஸ்தானில் டேன்டி தர்பா ஹெல் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் 2 ஏவுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் ஒன்று வீட்டின் மீது விழுந்ததில் அந்த வீடு தரைமட்டமானது.

இதில் அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் 3 பேர் பலியானார்கள். மற்றொரு ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹக்கி முல்லா மசூத் கொல்லப்பட்டார். வசிரிஸ்தானில் டேன்டி தர்பா ஹெல் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு அவர் காரில் வீட்டுக்கு சென்றபோது, ஏவுகணை தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் இதை அமெரிக்க உளவுத் துறையும், பாகிஸ்தான் ராணுவமும் உறுதி செய்துள்ளன. ஆனால் மசூத் கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவுக்கு, பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நசீர் அலிகான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தாக்குதல் நடத்திவரும் தலிபான் தீவிரவாதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சி மேற்கொண்ள்ளது. இந்நிலையில் மசூத் கொல்லப்பட்டதால் பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்