முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேனல் 4 தொலைக்காட்சி வீடியோ: இலங்கை அரசு மறுப்பு

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, நவ.5 - இசைப்பிரியா பற்றி சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரத்தை இலங்கை அரசு மறுத்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற போரில் ராணுவ வீரர்களின் அத்துமீறல்களை பிரிட்டனைச் சேர்ந்த சேனல்_4  வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது.  

தமிழ்ப் பெண்ணான இசைப் பிரியாவை இலங்கை ராணுவத்தினர் இழுத்துச் செல்வது போன்ற வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது. இதுபற்றி இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ரூவன் வானிக சூரியா கூறியது:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடைபெற்றபோதும், காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ள போதும் இலங்கைக்கு எதிராக இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை சேனல்_4 வெளியிட்டு வருகிறது. இந்த வீடியோவை நாங்கள் மறுக்கிறோம். இது முற்றிலும் புனையப்பட்டுள்ளது. எங்களிடம் சரணடைந்தவர்கள் யாரையும் நாங்கள் கொல்லவில்லை. சேனல்_4 வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரங்கள் மீது நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

சேனல்_4 வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரங்கள் குறித்து இலங்கை மனித உரிமை கவுன்சிலின் மூத்த ஆணையர்  பிரதிபா மாகாநாமா காவே கூறுகையில், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை தடுக்கவே இதுபோன்ற பொய்யான வீடியோ ஆதாரத்தை சேனல்_4 வெளியிட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் வரும் 15_ம் தேதி தொடங்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டை கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்ட் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்