முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலிபான் புதிய தலைவராக சையத் மசூத் தேர்வு

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், நவ.5  - தலிபான் இயக்கத்தின் புதிய தலைவராக சஜ்னா என்ற கான் சையத் மசூத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தலிபான் இயக்கத்தின் தலைவாரக இருந்த மசூத்தை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில், காரில் சென்று கொண்டிருந்த  மசூத் கொல்லப்பட்டார். 

இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவசர ஆலோசனை நடத்தினார். கடந்த வாரம் நவாஸ் ஷெரீப்  இங்கிலாந்து சென்றார். அப்போது அவர் துணைப் பிரதமர் நிக் கிளக்கை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பேச்சு நடத்தினார். பாகிஸ்தானில் உள்ள தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று அவர் கூறினார். அதற்குள் அமெரிக்க ஆளில்லா விமானம் ஏவுகணை தாக்குதல் நடத்தி தலிபான் தலைவர் மசூத்தை கொன்றது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவித்திரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் மசூத்தின் உடலை ரகசிய இடத்தில் வைத்து இறுதி சடங்கு நடத்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர் தலிபான் இயக்கத்தின் புதிய தலைவராக சஜ்னா என்ற கான் சையத் மசூதை  தேர்வு செய்துள்ளனர்.

         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்