முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 40 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

கானோ,நவ.6 - நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற தீவிர அமைப்பின் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இவர்களின் அட்டகாச துப்பாக்கி சூட்டில் 40 பேர் பரிதாபமாக உயிழந்துள்ளனர். 

நைஜீரியாவில் மேற்கத்திய கல்விமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் யாபே, போடிஸ்கம் நகரத்தில் உள்ள பள்ளியில் இவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் மாணவர்கள் உட்பட 42 பேர் பலியானார்கள். 

இந்நிலையில் நைஜீரியா பர்னோ மாகாணம் குலும்பா நகரத்தின் 2 கிராமங்களில் பைக் மற்றும் வேன்களில் திடீரென வந்த தீஅவிரவாத கும்பல் மக்களை சரமாரியாக சுட்டு கொன்றது. இதில் 300 வீடுகள் சூறையாடப்பட்டன. 20 கடைகள், 15 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் 40 பேர் பலியாகி உள்ளனர். இதை பர்னோ மாகாண அரசு உறுதிப்படுத்தி உள்ளது. இந்த  தாக்குதலுக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் போகோ தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்