முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை தேர்தல் நடத்த தயாரா? சோனியாவுக்கு ஜெகன் சவால்

திங்கட்கிழமை, 16 மே 2011      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,மே.- 16 - ஆந்திராவில் சட்டசபை தேர்தல் நடத்த தயாரா? என்று ஜெகன் மோகன் ரெட்டி சோனியாவுக்கு சவால் விடுத்துள்ளார். மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி கடப்பா மாநிலத்தில் எம்.பி. ஆக இருந்தார். தந்தை மறைவிற்கு பிறகு மேலிட தலைவர்களுடன் கருத்து வேற்றுமையில் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது. ஜெகன் தான் ஆரம்பித்த ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் கடப்பா தொகுதியில் போட்டியிட்டார்.
நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஜெகன் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.வெற்றி பெற்ற ஜெகன் சோனியா காந்திக்கு சவால் விடுத்துள்ளார். ஆந்திராவில் தேர்தல் நடந்தால் ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசமும் தோல்வியடைந்து விடும் என்றார். இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்த போது கூட இந்த தேர்தல் தனது தந்தை ராஜசேகர ரெட்டிக்கும், சோனியாவுக்கும் இடையே ஏற்பட்ட போட்டி என கூறியிருந்தார். சோனியாவுக்கு சவால் விடுக்கும் விதமாக அவர் கூறியதாவது,
காங்கிரஸ் கட்சிக்கு நான் விடுக்கும் சவால் இது தான். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் சட்டசபை தேர்தலை அறிவிப்பு செய்யுங்கள். சோனியா மற்றும் ராகுல் காந்தியின் புகைப்படத்துடன் வாருங்கள். நான் என் தந்தையின் புகைப்படத்தோடு வருகிறேன். தேர்தல் நடந்தால் காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் டெபாசிட் இழக்கும். எப்போதும் மறக்க முடியாத அளவுக்கு மிக பரிதாபகரமான தோல்வியை அடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis