முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலின் கோரிக்கை ஐகோர்ட நிராகரிப்பு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.9 -தமிழக அரசு சார்பில் விடப்பட்டுள்ள சிற்றுந்துகளில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் கட்சி சின்னம் அல்ல என்பதற்கான ஆதாரங்களை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்ததையடுத்து, மு.க.ஸ்டாலின் விடுத்து இருந்த கோரிக்கையை ஐகோர்ட் நீதிபதி நிராகரித்து உத்தரவிட்டார்..

தமிழக அரசு சார்பில், சென்னையில் விடப்பட்டுள்ள சிற்றுந்துகளில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தீட்டப்பட்டுள்ளது. ஏற்காடு இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும், இரட்டை இலை சின்னம் பொறித்த 610 சிற்றுந்துகளை தமிழக அரசு இயக்க உள்ளது. 

அரசின் திட்டங்களில் கட்சியின் சின்னத்தை தீட்டுவது சட்டவிரோதமானது. அதற்கு தடை செய்ய வேண்டும். மேலும், முதல்வர், அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்  என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு, நேற்று காலை நீதிபதி சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்து. மு.க.ஸ்டாலின் சார்பில் வழக்கறிஞர் விடுதலை ஆஜராகி, மனுவில் குறிப்பிட்டுள்ளதையை எடுத்துரைத்தார். தமிழக அரசு சார்பில் தலைமை அரசு வழக்கறிஞர் 

சோமையாஜூ ஆஜராகி, தமிழக அரசு சார்பில் விடப்பட்டுள்ள 50 சிற்றுந்துகளில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள், மனுதாரர் குறிப்பிடுவது போல் கட்சி சின்னம் அல்ல.

அந்த சிற்றுந்துகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதுகாப்பும் ஏற்படாதவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த சிற்றுந்துகள் அனைத்தும் பசுமையை போற்றுபவை என்பதால் இலைகள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற சிற்றுந்துகள் லண்டன் உள்ளிட்ட மேலை நாடுகளில் விடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றன என்று வாதிட்டு, அதற்கான புகைப்படங்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

மேலும் அவர் வாதிடுகையில், மனுதாரர் குறிப்பிடுவது போல், ஏற்காடு இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களை மனதில் வைத்து, தமிழ்நாடு முழுவதும் 610 சிற்றுந்துகளை விடும் திட்டம் அரசிடம் இல்லை என்றும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, 610 சிற்றுந்துகளை விடும் திட்டம் அரசிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலைகள் குறித்து பசுமையை போற்றும் விதமாக தெரிவிக்கப்பட்டு, அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், மனுதாரர் கோரியபடி, முதலமைச்சர், அமைச்சர், அதிமுக தலைமைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட முடியாது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக, தலைமைச் செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர்  ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்