முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக பா.ஜ. அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை:பா.ஜ தலைவர் பேட்டி

திங்கட்கிழமை, 16 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே - 16 - கர்நாடகத்தில் எடியூரப்பா அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான தன்ஞ்செயகுமார் தெரிவித்தார். சட்டசபையில் தங்களது கட்சிக்கு முழு மெஜாரிட்டி உள்ளது என்றும் அவர்  கூறினார். இதுகுறித்து தனஞ்செயகுமார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், 10 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் 4 சுயேட்சைகளும் டெல்லியில் இருக்கிறார்கள். இவர்கள் எடியூரப்பா அரசுக்கு தங்களது நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்து தனித்தனி கடிதங்களை கொடுத்திருக்கிறார்கள் என்று கூறினார். பெங்களூரில் இருக்கும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வும் பா.ஜ.க. அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்திருக்கிறார். எனவே கர்நாடகத்தில் எந்த நெருக்கடியும் இல்லை. எங்களின் பலம் 109 ல் இருந்து 120 ஆக உயர்ந்துவிட்டது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா அரசுக்கு தனி மெஜாரிட்டி உள்ளது என்றும் தனஞ்செயகுமார் கூறினார். கர்நாடக சட்டசபையில் 11 போட்டி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களையும் 5 சுயேட்சைகளையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். ஆனால் இதை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ததை அடுத்து எடியூரப்பா அரசுக்கு பிரச்சனை ஏற்பட்டது. ஆனாலும் ஆட்சிக்கு நெருக்கடி இல்லை என்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony