Idhayam Matrimony

தயாரிப்பாளர் தலைவராக பொறுப்பேற்ற எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி

திங்கட்கிழமை, 16 மே 2011      சினிமா
Image Unavailable

சென்னை,மே.- 16 - தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராம. நாராயணன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய தலைவராக எஸ்.ஏ. சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைவர் பொறுப்பேற்றுள்ள அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,  ராமநாராயணன் பதவி விலகியதால் என்னை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். தலைவர் பதவி காலியானால் துணைத் தலைவர் அப்பதவிக்கு தேர்வாவது சங்கத்தின் விதி. அந்த சட்டத்தின் படி நான் பொறுப்பேற்றுள்ளேன். கடந்த காலங்களில் தயாரிப்பாளர் சங்கம் மோசமான நிலையில் இருந்தது. அதில் அரசியல் சாயம் பூசப்பட்டு குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு அடமானம் வைக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் எல்லாம் அக்கட்சிக்கு அடிமைகளாக்கப்பட்டனர். நடந்த தேர்தல் மூலம் தமிழக மக்களுக்கு மட்டுமல்லாது, தயாரிப்பாளர்களுக்கும் அடிமை சங்கிலி நொறுக்கப்பட்டு விட்டது. இனிமேல் தயாரிப்பாளர் சங்கம் அரசியல் சாயமின்றி செயல்படும். முதல்வர் ஜெயலலிதாவின் துணையுடன் தயாரிப்பாளர் நலனுக்காக பாடுபடுவேன். அவர்களுக்கு தேவையானதை அரசிடம் கேட்டு பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்