முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பகோணம் அருகே நாகநாதசுவாமி கோயிலில் இன்று ராகு பெயர்ச்சி விழா

திங்கட்கிழமை, 16 மே 2011      ஆன்மிகம்
Image Unavailable

கும்பகோணம்,மே.- 16 - தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் தென் மேற்கு மூளையில் ஸ்ரீ ராகு பகவான் தனி சன்னதி ஒன்று நாக கன்னி, நாக வள்ளி என இரு துணைவியருடன் ஸ்ரீமங்கள ராகுவாக காட்சி தருகிறார். இத்திருத்தலத்தில் ராகு காலத்தில் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கமாகும். இந்த சிறப்பு மிக்க கோயிலில் இன்று ராகு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. காலை 9.48 மணிக்கு ராகு தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்கிறார். இதையொட்டி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மகா அபிஷேகமும், சிறப்பு பாலாபிஷேகமும், தீபாராதனையும் ஏற்கனவே நடந்தது. நேற்றிரவு 8 மணிக்கு ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலா புறப்பாடும் நடைபெற்றது.ராகு பெயர்ச்சியையொட்டி 10 ம் தேதியில் இருந்து 13ம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. 2 ம் கட்ட லட்சார்ச்சனை நடந்து முடிந்தவுடன் ராகு பகவான் தனுசு ராசியில் விருச்சிக ராசிக்கு பெயர்கிறார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்