முக்கிய செய்திகள்

நேட்டோவால் என்னை கொல்ல முடியாது: கடாபி

திங்கட்கிழமை, 16 மே 2011      உலகம்
Libya 1

திரிபோலி,மே.- 16 - நேட்டோ படைகளால் என்னை கொல்ல முடியாது. அவற்றால் தாக்க முடியாத இடத்தில் நான் இருக்கிறேன் என்று லிபிய நாட்டின் அதிபர் கடாபி நாட்டு மக்களுக்கு ஆடியோ கேசட் மூலம் அறிவித்திருக்கிறார். நேட்டோ படைகள் நடத்திய குண்டு வீச்சில் அவருடைய மாளிகை சேதம் அடைந்தது. நள்ளிரவில் நடந்த இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். அதிபர் கடாபி தாக்குதலில் கடுமையாக காயம் அடைந்திருக்கிறார். அவரை லிபியாவை விட்டு வேறு எங்கோ கொண்டு சென்று விட்டனர் என்று நாட்டில் வதந்திகள் பரவின. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவும், ராணுவம் தன்னை விட்டு விலகாமல் இருக்கவும் இந்த ஆடியோ கேசட்டை வெளியிட்டிருக்கிறார் கடாபி. இதன் மூலம் அவர் உயிரோடு இருப்பது தெளிவானாலும், வெளியே வர முடியாத அளவுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார். கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் அவர் எங்கோ பதுங்கியிருக்கிறார் என்பது இதில் இருந்து தெளிவாகிறது. ஆனால் கடாபி தலைநகரிலேயே இருக்கிறார் என்று அரசின் பத்திரிக்கை தொடர்பாளர் மூதா இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: