முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றார்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, மே.17 - புதுவை முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றார். கவர்னர் மாளிகையில் நடந்த எளிமையான விழாவில் கவர்னர் இக்பால்சிங் ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி 20 இடங்களை கைப்பற்றியது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களிலும், அ.தி.மு.க. 10 இ

டங்களில் போட்டியிட்டு 5 இடங்களிலும் வெற்இ பெற்றது. 

என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் காரைக்காலில் இருந்து சுயேட்சையாக வெற்றி பெற்ற வி.எம்.சி.சிவக்குமார் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். 

இதைதொடர்ந்து புதிய எம்.எல்.ஏ.க்களுடன் ரங்கசாமி கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் இக்பால்சிங்கை சந்தித்து சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட கடிதத்தையும், சுயேட்சை எம்.எல்.ஏ. சிவக்குமார் என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து அளித்த கடிதத்தையும் கொடுத்தார். 

புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் ஜனாதிபதியின் அனுமதி பெற்ற பின்னரே ஆட்சி அமைக்க முடியும். 

எனவே இதற்கான கடிதத்தை கவர்னர் இக்பால்சிங் நேற்று முன்தினம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார். இந்நிலையில் நேற்று காலை உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் கடிதம் வந்தது. இதையடுத்து ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்கும் விழா நேற்று மதியம் 2.45 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கவர்னர் மாளிகையின் வளாகத்தில் அவசர அவசரமாக விழா மேடை அமைக்கப்பட்டது.

பிற்பகல் 2.40 மணிக்கு விழா மேடைக்கு கவர்னர் இக்பால்சிங்கும், ரங்கசாமியும் வந்தனர். இதையடுத்து விழா தொடங்கியது. முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதைதொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிட கடிதத்தை தலைமை செயலாளர் சந்திரமோகன் மேடையில் வாசித்தார். 

பின்னர் ரங்கசாமிக்கு கவர்னர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றதும் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார். பின்னர் முதல்வர் ரங்கசாமிக்கு கவர்னர், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த பதவி ஏற்பு விழ மிகவும் எளிமையாக நடந்தது குறிப்பிடத்தக்கது. விழா முடிந்த பின்னர் சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்வர் அறைக்கு சென்ற ரங்கசாமி வந்து நான்கு கோப்புகளில் கையெழுத்திட்டார். 

முதியோர் உதவித்தொகை ஆயிரமாக உயர்த்தி வழங்கும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார். அடுத்ததாக மஞ்சள் கார்டுக்கு 15 கிலோ இலவச அரிசியும், சிவப்பு கார்டுகளுக்கு 25 கிலோ இலவச அரிசியும் வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். 

இதுதவிர மேலும் இரு கோப்புகளிலும் அவர் கையெழுத்திட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஆசியுடனும், நல் ஆதரவுடனும் எங்கள் கட்சி தலைமையில் பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஆட்சியையும் பிடித்துள்ளது.   

அமைச்சர்கள் வேறொரு நாளில் பதவி ஏற்க உள்ளனர் என்று கூறினார்.

 பதவி ஏற்பு விழாவையொட்டி கவர்னர் மாளிகையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதேபோல சட்டசபை வளாகம் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்