முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: இ.மு. ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
Image Unavailable

அகர்தலா,மே.17 - பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிபுரா மாநிலத்தில் இடது முன்னணி நேற்று தனது போராட்டத்தை துவக்கியது. நாடு முழுவதும் இந்த போராட்டம் வெடிக்கும் என்றும் இடது முன்னணி எச்சரித்துள்ளது. பெட்ரோல் விலையை உயர்த்தியதோடு அல்லாமல் டீசல், சமையல் கேஸ் விலையையும் அதிகரிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு இப்படி செய்வது துரோகம் என்று இடது முன்னணி தலைவர்கள் கூறினார்கள். எனவே விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். காரணம், பாமர மக்களுக்கு இது பெரும் சுமையாகி விடும் என்றும் இடது முன்னணி எச்சரித்துள்ளது. திரிபுராவில் நேற்று இடது முன்னணி தொண்டர்கள் ஆர்ப்பாட்ட பேரணிகள் நடத்தினார்கள். அங்கு 12 மணி நேர பந்த் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அநேகமாக இன்று அந்த பந்த் நடக்கும் என தெரிகிறது. பாமர மக்களுக்கு எதிராக காங்கிரஸ் அரசு செய்த சதி இது என்றும் இடதுசாரி தலைவர்கள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்