முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அரசை கலைக்க சிபாரிசு செய்திருந்தால் துரதிர்ஷ்டவசமானது

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.17 - கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா அரசை கலைக்கக்கோரி மத்திய அரசுக்கு அந்த மாநில கவர்னர் பரத்வாஜ் சிபாரிசு செய்திருந்தால் அது துரதிர்ஷ்டவசமானது, கண்டனத்துக்குரியது என்று பாரதிய ஜனதா கட்சியின் இளம் துருக்கியர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் 12 பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பு செல்லாது என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதனையொட்டி கர்நாடக மாநில அரசியலில் மீண்டும் குழப்பமான சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் கர்நாடக சட்டசபையை கலைக்க மத்திய அரசுக்கு கவர்னர் பரத்வாஜ் சிபாரிசு செய்து அறிக்கை அனுப்பியிருப்பதாக தெரிகிறது. அப்படி கவர்னர் அறிக்கை அனுப்பியிருந்தால் அது துரதிர்ஷ்டவசமானது, கண்டனத்துக்குரியது என்று ஜனதா கட்சியின் ராஜ்யசபை தலைவர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். ஒரு அரசின் உண்மையான பலத்தை தெரிந்துகொள்ள சட்டசபையில்தான் முடியும். சட்டசபையில் எந்த கட்சிக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்பது சட்டசபையில்தான் தெரியும் என்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அருண்ஜெட்லி கூறினார். கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் அனைத்து தேர்தல்களிலும் பாரதிய ஜனதா வெற்றிபெற்று வருகிறது. பஞ்சாய்து, நகராட்சி, மாநகராட்சி, 3 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் ஆகிய அனைத்திலும் பாரதிய ஜனதா வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் பாரதிய ஜனதா அரசுக்கு மக்களிடம் முழு ஆதரவு இருக்கிறது என்பது தெரிகிறது என்றும் அருண்ஜெட்லி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்