முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு - பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,மே.17 - பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பா.ஜ.க.வினர் நேற்று 14 இடங்களில் தடைகளை ஏற்படுத்தி போராட்டம் நடத்தினார்கள். அக்ஷர்தாம் ஆலயத்தில் பாரதீய ஜனதா தொண்டர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த கோயில் அருகே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அம்பேத்கார் நகரில் பா.ஜ.க.வினர் பல தடைகளை ஏற்படுத்தி போராட்டம் நடத்தினார்கள். 

இது குறித்து பாரதீய ஜனதாவின் டெல்லி பிரிவு தலைவர் விஜேந்தர் குப்தா கூறுகையில், பெட்ரோல் விலையை தேர்தலுக்கு பிறகு மத்திய அரசு உயர்த்தியிருப்பது நாட்டு மக்களுக்கு செய்த துரோகம் ஆகும் என்று கூறினார். மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசின் சுய ரூபத்தை இந்த விலை உயர்வு அம்பலப்படுத்தி விட்டதாகவும் அவர் கூறினார். மத்தியில் உள்ள சோனியா அரசும் சரி, டெல்லியில் உள்ள ஷீலா தீட்சித் அரசும் சரி, மக்களுக்கு ஆபத்தானவை என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கிட்டத்தட்ட 8 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு ஒரு லிட்டருக்கு ரூ. 15 வரை உயர்ந்து விட்டது. கடந்த ஆண்டு ஏப்ரலில் ரூ. 47.93 க்கு விற்கப்பட்ட பெட்ரோல், இப்போது ஒரு லிட்டர் ரூ. 63.67 க்கு விற்கப்படுகிறது. இதை விட கொடுமை என்ன வேண்டும் என்று விஜேந்தர் குப்தா கேட்டார். பாரதீய ஜனதா நடத்திய இந்த போராட்டத்தை அடுத்து டெல்லியில் முக்கிய சாலைகளில் போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. பா.ஜ.கவினர் ஏற்படுத்திய தடைகளை அவர்களே சில மணி நேரத்தில் அகற்றினார்கள்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்