முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை கமிஷனராக ஜே.கே.திரிபாதி நியமனம்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே17 - சென்னை கமிஷனராக ஜே.கே. திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் மாநகரில் சட்டம் ஒழுங்கை நிலைட்டும் விதமாக கமிஷனர் ராஜேந்திரனை மாற்ற ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்தார். 

இதுகுறித்த விபரம் வருமாறு:​ 

நேற்று காலை தமிழகத்தின் புதிய முதல்வராக ஜெயலலிதா பதவிஏற்றுக்கொண்டார். பின்னர் கோட்டைக்கு சென்று முக்கிய கோப்புகளில்  கையெழுததிட்டார். அப்போது தமிழத்தின் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும் என்றும், இதுகுறித்து பொதுமக்கள் யாரும் பயப்படத்தேவேயில்லை என்று தெரிவித்தார். இந்த நிர்வாக நடவடிக்கையில் முதலாவதாக இதுவரை சென்னை கமிஷனராக இருந்து வந்த ராஜேந்திரன் திடீரென மாற்றப்பட்டு, மாநில சிறைதுறை ஏ.டி.ஜி.பி. யாக நியமிக்கப்பட்டார்.  ஏற்கனவே  மாநில சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. யாக இருந்து வந்த ஜே.கே.திரிபாதி நேற்று மாலையில் சென்னை போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது அவர் கூறியாதவது,

முதலமைச்சரின் கூற்றுப்படி ,தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முறையாக நிலைநாட்டப்படவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் போலீஸ் துறை தூரிதாமாக செயல்படும். பொதுமக்கள் பாதுகாப்புடனும், பயமின்றியும் வாழ் பாதுகாப்பு கொடுக்கப்படும்.   முதியவர்கள் , பெண்கள்  யாவரும் நிம்மதியுடன் நடமாடவேண்டும்,. கொலை, கொள்ளை குற்றங்கள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  குற்றவாளிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கபடுவார்கள்.  மாநிலத்தின் சட்டம் -ஒழுங்கு சீராக இருக்க அனைத்து ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள் ளப்படும். சிறு குற்றமானும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகம்  அமைதி பூங்காவக மாற காவல்துறை சிறப்பாக செயல்படும் என்று புதிய கமிஷனர் ஜே.கே. திரிபாதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்