முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமலையில் காகித பையில் லட்டு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி,மே.17 - திருமலை கோயில் நிர்வாகம் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பைகளில் லட்டு வழங்கப்படுவதற்கு மாற்றாக சணல் மற்றும் காகித பைகளில் லட்டுகள் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான பணியை ஆந்திர மாநில மாற்றுத் திறனாளிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் சணல் பை ரூ. 6. காகித பை ரூ. 4 விலையில் தயாரித்து சோதனை அடிப்படையில் பக்தர்களிடம் விற்பனை செய்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. எனவே கோயில் நிர்வாகம் விரைவில் பிளாஸ்டிக் கவர்களை முற்றிலுமாக ஒழித்து சணல் பைகளில் லட்டு வழங்க நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்