முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஜெயலலிதா ஆணை

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மே. 17 - நேற்று மதியம் 12.48 மணிக்கு தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா மாலை தலைமைச் செயலகம் வந்த ஜெயலலிதா, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அனைவருக்கும் 20 கிலோ இலவச அரிசி,ஏழை மற்றும் பட்டதாரி பெண்ணுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உட்பட வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆணைபிறப்பித்தும், இத்திட்டங்களை செயல்படுத்த சிறப்புத்துறை ஏற்படுத்வது உட்பட 7 கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்திலுள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தமது பணியைத் தொடங்கினார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமது முதற்பணியாக, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில்  அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகலை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டதுடன், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அரசின் சிறப்புத் திட்டங்களை செம்மையோடு, விரைந்து செயல்படுத்தவும் சிறப்புத் திட்டங்களை செயலாக்கத்துறை எனும் பெயரில் புதிய துறை ஒன்றை தொடங்கவும் உத்தரவு பிறப்பித்து கையொப்பம் இட்டார். 

இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 

படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.25,000 நிதி உதவியோடு, மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (அரை சவரன்0 தங்கம் இலவசமாக வழங்கப்படும் எனும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆணை பிறப்பித்து அதற்குரிய கோப்பிலும், 

இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளோமா பட்டம் பெற்ற பெண்கள் திருமண உதவித்தொகையை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்க ஆணையிட்டு அந்த கோப்பிலும், 

முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூபாய் ஆயிரமாக (1,000) உயர்த்தி வழங்க ஆணையிட்டு அதற்குரிய கோப்பிலும் கையெழுத்திட்டேன்.

மேலும், பொது விநியோக திட்டத்தில் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவசமாக வழங்க ஆணை பிறப்பித்து அதற்குரிய கோப்பிலும், 

தமிழகத்தின் கடலோர மீன் வளத்தைப் பாதுகாக்க வேண்டி ஒவ்வோர் ஆண்டும் 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும் காலகட்டத்தில் பாதிக்கப்படும் மீனவக் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.1000 உதவித்தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பித்து அதற்குரிய கோப்பிலும்,

அரசுப் பணி புரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்க மகப்பேறு கால சலுகையாக 6 மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்று ஆணை பிறப்பித்து அதற்குரிய கோப்பிலும்,

அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் அமல்படுத்தவும், அரசின் சிறப்புத் திட்டங்களை செம்மையோடு விரைந்து செயல்படுத்தவும் புதிய துறை ஒன்றைத் தொடங்க அதற்குரிய கோப்பிலும் கையெழுத்திட்டேன்.

இத்துறை சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை எனும் பெயரில் அழைக்கப்படும் இத்துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் விரைந்து செம்மையோடு நிறைவேற்றப்படும்.இவ்வாறு ஜெயலலிதா நிருபர்களிடம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்