முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      அரசியல்
Image Unavailable

1. ஓ. பன்னீர் செல்வம்:

 

நிதித் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் ஓ. பன்னீர் செல்வம் தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். 60 வயதான இவருக்கு சொந்த ஊர் பெரியகுளமாகும். இவருக்கு விஜயலெட்சுமி என்ற மனைவி மற்றும் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஜெயபிரதீப் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில் ரவீந்திரநாத் குமார் அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராக உள்ளார்.  பி.ஏ. படித்துள்ள ஓ. பன்னீர்செல்வம், பெரியகுளம் அ.தி.மு.க. நகர செயலாளர், நகர் மன்ற தலைவர், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், முதல்வர், வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். தற்போது இவர் அ.தி.மு.க. பொருளாளராகவும், போடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகியும் உள்ளார்.  

 

2. செங்கோட்டையன்:

 

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் கிராமத்தை சேர்ந்த இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், கதிர் என்ற ஒரே மகன் உள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் தற்போது 2 வது முறையாக அமைச்சராகி உள்ளார். அதுவும் வேளாண் துறைக்கே அமைச்சராகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 1967 முதல் இவர் அ.தி.மு.க. வில் பல்வேறு முக்கிய பொறுப்புக்களை வகித்து வந்துள்ளார். கோபி செட்டி பாளையம் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெறும் இவர் அ.தி.மு.க. தலைமை கழக செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார். 

 

3. விஸ்வநாதன்:

 

மின்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் இவர் நத்தம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 62 வயதான இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், கவிதா, ரஞ்சிதா என்ற இரு மகள்களும், அமர்நாத் என்ற ஒரு மகனும் உள்ளனர். விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள இவர், 1972 முதல் அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார். சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவராகவும், திண்டுக்கல் மாவட்ட செயலாளராகவும், 1998 முதல் எம்.எல்.ஏவாகவும் தொடர்ந்து இருந்து வருகிறார். இவர் 4 வது முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே உணவுத் துறை, தொழில்துறை, போக்குவரத்து துறை மற்றும் மின்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ள இவர் பி.எஸ்.சி பட்டம் பெற்றவர். 

 

4. கே.பி.முனுசாமி:

 

உள்ளாட்சித்துறை அமைச்சரான கே.பி.முனுசாமிக்கு வயது 59. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர். பி.ஏ., பி.எல்., படித்துள்ளார். தந்தை பூங்காவனம் கவுண்டர், தாயார் மங்கம்மாள், மனைவி மங்கையர்கரசி. இவருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர்.

 

5. சி.சண்முகவேலு: 

 

மடத்துக்குளம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள சி.சண்முகவேலு இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதனை விட 19,669 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்றவர். 61  வயதாகும் இவர் எம்.ஏ. பட்டம் பெற்றவர் சொந்த ஊர் மடத்துக்குளம் சமராயபட்டி. கொங்கு வேளாள கவுண்டர் இனத்தைச் சேர்ந்த இவருக்கு ஒரு மனைவியும்(மனோன்மணி) ஒரு மகனும், ஒரு மகனும் உள்ளனர். எம்.ஜி.ஆர்  அதி.மு.க. வை தொடங்கிய காலத்திலிருந்து இருந்து வருகிறார். ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்த போது இவர் ஜெயலலிதா அணியின் மாவட்ட தலைவராக இருந்துள்ளார். மேலும் அ.தி.மு.க. கோவை புறநகர் மாவட்ட செயலாளர், துணைத்தலைவர், அவைத்தலைவர் ஆகிய பொறுப்புக்கள்  வகித்துள்ளார். கட்சியின் அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். இரண்டுமுறை (2001,2006) உடுமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். 2001ல் 8 மாத காலம் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர்.

 

6. ஆர்.வைத்தியலிங்கம்:

 

வீட்டுவசதி துறை அமைச்சரான ஆர்.வைத்தியலிங்கத்தின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் தெலுங்கன்குடி காடு. இவருக்கு தங்கம் என்ற மனைவி மற்றும் 3மகன்கள் உள்ளனர். அவர் பி.ஏ., பட்டம் பெற்றவர். இவர் ஒரத்தநாடு தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவர். தொழில்துறை அமைச்சராகவும் வனத்துறை அமைச்சராகவும் முன்பு இருந்தார்.

 

7. அக்ரி கிருஷ்ணமூர்த்தி:

 

உணவுத்துறை அமைச்சரான அக்னி கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை மாவட்டம் இலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் 1977 ல் கோவை வேளாண் கல்லூரியில் மாணவர் துணைச்செயலாளராகவும், 1980 ல் மாணவர் செயலாளராகவும் இருந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர்.

 

8. சொ.கருப்பசாமி:

 

தமிழக கால்நடைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சொ.கருப்பசாமி சங்கரன் கோவில்(தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவரது சொந்த ஊர் சங்கரன்கோவில் அருகேயுள்ள புளியம்பட்டியாகும். இவர் பி.யூ.சி. படித்துள்ளார். இவரது தந்தை சொக்கன். இவரது மனைவி முத்துமாரி. மகன் மாரிச்சாமி ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். மகள் சீதாலெட்சுமிக்கு திருமணம் முடிந்துவிட்டது. அமைச்சர் கருப்பசாமி மாநில அமைப்பு செயலாளராகவும், ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும், நெல்லை மேற்கு மாவட்ட  பொறுப்பாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த 1996, 2001, 2006, தேர்தல்களில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தொடர்ந்து 4வது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதது. தொடர்ந்து ஒரே தொகுதியில் 4முறை போட்டியிட்டு வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.

 

9. பி.பழனியப்பன்:

 

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரான பழனியப்பனுக்கு வயது 50. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகேயுள்ள மோலையானூரைச் சேர்ந்தவர். எம்.எஸ்.சி., பட்டதாரியான இவர் விவசாயம் செய்து வருகிறார். தந்தை பெருமாள் கவுண்டர், தாயார் பொன்னியம்மாள், மனைவி ரோஜா. இவருக்கு எழில்மறவன் என்ற மகனும், யாழினி என்ற மகளும் உள்ளனர்.

 

10. சி.வி. சண்முகம்:

 

பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான சி.வி.சண்முகம் விழுப்புரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். 46 வயதான இவர் பி.ஏ., பிஎல்., படித்தவர். இவருடைய தந்தை வேணுகோபால் வந்தவாசி தொகுதி எம்.பி.,யாகவும், ஒருங்கிணைந்த தென்னார்காடு மாவட்ட அமைப்பாளராகவும் இருந்துள்ளார். சி.வி. சண்முகத்திற்கு கவுரி என்ற மனைவியும் ஜெயசிம்மன் என்ற ஒரு மகனும், வள்ளி என்ற ஒரு மகளும் உள்ளனர். 

 

11. செல்லூர் கே.ராஜூ :

 

புதிய அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக  நியமிக்கப்பட்டுள்ள செல்லூர் கே,ராஜூ மதுரையை சேர்ந்தவர். இவருக்கு வயது57. இவரது தந்தை பெயர் காமாட்சித்தேவர். மனைவி பெயர் ஜெயந்தி. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பி.எஸ்சி பட்டதாரியான இவர் முழு நேர அரசியல்வாதியாக இருந்து வருகிறார். தற்போது மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார். இவர் ஏற்கனவே மதுரை மாநகராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்று மாமன்ற எதிர்கட்சி தலைவராக சிறப்பாக பணியாற்றினார். தற்போது மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகி உள்ளார்.

 

12. கே.டி. பச்சைமால்:

 

தமிழக வனத்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு சொந்த ஊர் நாகர்கோவில் அருகேயுள்ள தம்பத்துக்கோணம். இவருடைய தந்தை தங்க நாடார், தாயார் கோவில்பிள்ளை அம்மாள். 1979 ம்ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்த இவர் 2000வது ஆண்டில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தவர். இவருக்கு பி.செல்வழகி(43) என்ற மனைவியும் பி.அபிஜித்(16),பி.அனிஜித்(14) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

 

13. எடப்பாடி பழனிச்சாமி:

 

நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான இடைப்பாடி பழனிச்சாமிக்கு சொந்த ஊர் இடைப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையமாகும். தந்தை பெயர் கருப்பகவுண்டர். தாயார் தவுசாயம்மாள். மனைவி பெயர் ராதா. மகன் நிதின் குமார். பி.இ. படித்துள்ளார்.

 

14. எஸ்.பி.சண்முகநாதன்:

 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர”க நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி.சண்முகந”தன் (வயது 57). ஸ்ரீவைகுண்டம் தெ”குதியில் க”ங்கிரஸ் வேட்ப”ளர் சுடலைய”ண்டியை எதிர்த்து பே”ட்டியிட்டு வெற்றிபெற்றவர். இவர் பண்ட”ரவிளையை சேர்ந்தவர். இவர் கடந்த 2001ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் தெ”குதியில் வெற்றிபெற்று ஜவுளி மற்றும் கைத்தறி துறை அமைச்சர”க பதவி வகித்த”ர். தற்பே”து தூத்துக்குடி ம”வட்ட அ.தி.மு.க. செயல”ளர”க உள்ள“ர். 

அவருடைய மனைவி ஆஷ”, ர”ஜ” என்ற மகனும் புவனேசுவரி, கலையரசி, பெ”ன்னரசி, தமிழரசி, பெ”ன்ரேக”, ஆகிய 5 மகள்களும் உள்ளனர். 

 

15. கே.வி. ராமலிங்கம்:

 

ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்து வரும் இவர் தாராபுரம் கள்ளிவலசை பகுதியைசேர்ந்தவர். பி.ஏ. பட்டதாரியான இவருக்கு, அம்மணி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் ஈரோடு மேற்கு தொகுதியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு பொதுப் பணித்துறை தற்போது வழங்கப்பட்டுள்ளது. 

 

16. எஸ்.பி. வேலுமணி:

 

சிறப்பு திட்ட செயலாக்க அமைச்சரான எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். கோவையை அடுத்த குனியமுத்தூரைச் சேர்ந்த இவர் எம்.ஏ., எம்.பில்., படித்துள்ளார். இவருக்கு வித்யாதேவி என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

 

17. டி.கே.எம். சின்னையா:

 

பிற்படுத்தப்பட்டோர் அமைச்சரான தாம்பரம் சின்னையாவுக்கு வயது 48. பி.ஏ., பட்டதாரியான இவர் அ.தி.மு.க. நகர செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவர் தாம்பரம் நகராட்சியில் கவுன்சிலராக இருந்து தேர்தலுக்காக அந்த பதவியை ராஜினாமா செய்தவர்.

 

18. எம்.சி. சம்பத்:

 

ஊரக தொழில் அமைச்சரான எம்.சி. சம்பத் கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது சொந்த ஊர் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் ஆகும். எம்.எஸ்.சி., பட்டதரியான இவர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். கடந்த 2001ம் ஆண்டு அ.தி.மு.க. அமைச்சரவையில் வீட்டு வசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

 

19. தங்கமணி:

 

வருவாய்த் துறை அமைச்சராக பதவியேற்றிருக்கும் இவர், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 51 வயதாகும் இவர் பி.ஏ. பட்டதாரியாவார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் மற்றும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.  

 

20. செந்தமிழன்:

 

சைதாப் பேட்டை தொகுதி எம்.எல்.ஏவான இவருக்கு செய்தி துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் தற்போது தென் சென்னை மாவட்ட செயலாளராக உள்ளார். இவருக்கு வயது 47. சென்னையை சேர்ந்த இவர், எம்.ஏ.எல். பட்டம் பெற்றவர். இவர் கட்சியின் மாணவரணி பதவிகளை வகித்தவர். கடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 

 

21. கோகுல இந்திரா:

 

தமிழக வணிக வரித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற எஸ்.கோகுல இந்திராவின் சொந்த ஊர் ராமநாதபுரம். இவர் 4.10.1966ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை சுப்பிரமணியன். ஒய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். பி.ஏ.பி.எல் முடித்த கோகுலஇந்திரா ஆரம்பத்தில் சிவகங்கையில் வழக்கறிஞராக பணியாற்றினார். இவரது கணவர் பெயர் சந்திரசேகர். இவரும் வழக்கறிஞரா பணியாற்றினார். அ.தி.மு.கவில் இணைந்த கோகுல இந்திரா 1990ம் ஆண்டு மாவட்ட மகளிர் அணி செயலாளராக பொறுப்பேற்றார். அதன்பின் மாநில மகளிர் அணி செயலாளராக பொறுப்பேற்றார். 2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை டெல்லியில் ராஜ்யசபா உறுப்பினராக பணியாற்றினார். தற்போது சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அ.தி.மு.க பொறுப்பாளராகவும், மாநில மகளிர் அணி செயலாளராகவும் இருந்து வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கோகுலஇந்திரா-சந்திரசேகர் தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பூர்ணிமா (18) எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். இரண்டாவது மகள் நிவேதா (14) 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

 

22. செல்வி ராமஜெயம்:

 

சமூகநலத்துறை அமைச்சரான செல்வி ராமஜெயம் புவனகிரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது சொந்த ஊர் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அகரமாகும். கணவர் ராமஜெயம். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

 

23. பி.வி. ரமணா:

 

கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சரான பி.வி.ரமணாவுக்கு வயது44. கம்மாவர் சமூதாயத்தைச் சேர்ந்த இவர் பி.எஸ்.சி., பி.பார்ம்., படித்தவர். இவரது தந்தை பக்தவச்சலம். தாய் பிரேமா. இவருக்கு லதா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். 

 

24. ஆர்.பி.உதயகுமார்:

 

தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உள்ள ஆர்.பி.உதயகுமாருக்கு வயது38. முழு நேர அரசியல்வாதி. இவரது தந்தை பெயர் போஸ். இவரது மனைவி பெயர் தாமரைச்செல்வி. இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர். இவர்சட்டக்கல்லூரியில்  படிக்கும் போதே அதிமுகவில் அதிக ஈடுபாடாக இருந்தார். முதலில் மாநகர் மாவட்ட மாணவரணி தலைவராகவும், பின்பு மாணவரணி செயலாளராகவும் பணியாற்றிய ஆர்.பி.உதயகுமாரின் சிறப்பான பணியை பாராட்டி அவர் மாநில மாணவரணி செயலாளராகவும், மதுரைமாநகர், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இவர் மதுரை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று பி.எல் பட்டம் பெற்றவர். மேலும் சமூகவியல் துறையில் எம்எஸ்டபிள்யூ எனும் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.  இவர் தற்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகி அமைச்சராகி உள்ளார்.

 

25. ந.சுப்பிரமணியன்:

 

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரான ந.சுப்பிரமணியன் கந்தர்வகோட்டை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது சொந்த ஊர் விராலிமலை அருகேயுள்ள நம்பம்பட்டி. பட்டயப்படிப்பு (டி.இ.இ.) படித்துள்ள இவர் சாலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

 

26. செந்தில் பாலாஜி:

 

கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற இவருக்கு வயது 36. இவரது சொந்த ஊர் மண் மங்களம் பஞ்சாயத்திற்குட்பட்ட ராமேஸ்வரபட்டி. பி.காம் பட்டதாரியான இவருக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர். தற்போது இவர் மாவட்ட செயலாளராக உள்ளார். 

 

27. மரியம்பிச்சை:

 

தமிழக சுற்றுச்சூழல், ம”சு கட்டுப்ப”டு மற்றும் சிறுப”ன்னை நல துறைகளின் அமைச்சர”க நியமிக்கப்பட்டுள்ள திருச்சியை சேர்ந்த என்.மரியம்பிச்சையின் வயது 60, பி.ஏ.பட்டத”ரியான இவர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் ப”த்திம” கனி, மரியம்பிச்சைக்கு ஆஷிக் மீர”, ர”ஜ்முகமது, அமீர் முகமது, ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இவர் அதிமுகவில் வட்ட செயல”ளர”க 20 ஆண்டுகள் பணிய”ற்றி உள்ள“ர். இது தவிர திருச்சி பெ”ன்மலை பகுதி அவைத்தலைவர், பெ”ன்மலை பகுதி செயல”ளர், இளைஞரணி ம”வட்ட தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். 2003 முதல் 2005வரை திருச்சி ம”நகர ம”வட்டசெயல”ளர”கவும், மாநகராட்சி கவுன்சிலராகவும் பணிய”ற்றி இருக்கிற”ர். கடந்த 2006 சட்டபேரவை தேர்தலில் திருச்சி 2வது தெ”குதியில் முன்ன”ள் திமுக அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்து பே”ட்டியிட்டு தே”ல்வி அடைந்த”ர். இப்பெ”ழுது நடந்த சட்டசபை தேர்தலில் அதேதிருச்சி மேற்கு தெ”குதியில் கே.என்.நேருவை எதிர்த்து பே”ட்டியிட்டு சும”ர் 7 ஆயிரம் ஓட்டு வித்திய”சத்தில் வெற்றி பெற்றுள்ள“ர். 

 

28. ஜெயபால்:

 

மீன்வள துறை அமைச்சரான ஜெயபாலுக்கு வயது 60. நாகை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு சொந்த ஊர் அக்கரப்பேட்டை ஆகும். பி.காம் பட்டதாரியான இவர் தற்போது நாகை மாவட்ட பொருளாளராக உள்ளார். இவருக்கு ஒரு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.  

 

29. இசக்கி சுப்பையா:

 

சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள இசக்கி சுப்பையா அம்பாசமுத்திரம் தொகுதியில் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் எம்.ஏ. எம்.எல். பட்டம் பெற்றவர். இவரது சொந்த ஊர் சேரன்மகாதேவி அருகேயுள்ள பிராஞ்சேரியாகும். தற்போது தென்காசி அருகேயுள்ள ஆயிரப்பேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி சித்த மருத்துவர். மகள் காந்திமதி எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வருகிறார். மகன் இசக்கி துரை 11ம் வகுப்பு படித்து வருகிறார். அமைச்சர் இசக்கி சுப்பையா முதன்முதலாக தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு செல்லும் புதுமுகம் என்பதோடு மற்றுமின்றி சட்டத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவர் நெல்லை மாவட்ட ஜெ.பேரவை இணைச்செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு குற்றாலத்தில் தங்கும் விடுதி, மற்றும் திருமண மண்டபம்  வைத்துள்ளார். 

 

30. புத்தி சந்திரன்: 

 

நீலகிரி மாவட்டம் அருகேயுள்ள கிண்ணக்கொரை கிராமத்தை சொந்த ஊராக கொண்டவர் புத்தி சந்திரன்(49).  இவரது அப்பா பெயர் மாதா கவுடர். அம்மா பெயர் கெப்பி அம்மாள். பி.எஸ்.சி.,பிட்.,பட்டம் பெற்றவர். விவசாய குடும்பதைச் சேர்ந்தவர். ஆரம்ப காலத்தில் பேரூராட்சி செயலாளர் பதவியும், அதனைத்தொடர்ந்து 16 ஆண்டுகாலம் குந்தா ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் கட்சியின் தலைமை அறிவிக்கும் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றுள்ளார். அ.தி.மு.க., அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள புத்தி சந்திரனுக்கு பத்மாவதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.  மகள் முகிலா பொறியியில் மூன்றாம் ஆண்டு முடித்து இறுதி ஆண்டுக்கும், மற்றொரு மகள் அனுசுயா மஞ்சூர் பள்ளியில் 9 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்புக்கும் செல்ல உள்ளனர்.

 

31. சி.த.செல்லப்ப”ண்டியன்:.

 

தெ”ழில”ளர் நலத்துறை அமைச்சர”க நியமிக்கப்பட்டுள்ள சி.த.செல்லப”ண்டியன் (வயது 54).  தூத்துக்குடி தெ”குதியில் அமைச்சர் கீத”ஜீவனை எதிர்த்து பே”ட்டியிட்டு வெற்றிபெற்றவர். எம்.ஏ. பட்டத”ரிய”ன இவர் தூத்துக்குடியில் க”ய்கரி ம”ர்க்கெட் தெ”ழில் செய்துவருகிற”ர். தூத்துக்குடி ம”வட்ட அண்ண” தெ”ழிற்சங்க செயல”ளர”க உள்ள“ர். நகர சபை கவுன்சிலர”க 5 ஆண்டுகள் பணிய”ற்றின”ர். அவருடைய மனைவி இந்திர”. ர”ஜ”சிங், ஜெபசிங் ஆகிய 2 மகன்களும், எஸ்தர் தங்கமணி என்ற மகளும் உள்ளனர். 

 

32. விஜய்:

 

வேலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வி.எஸ். விஜய்க்கு சுகாதாரத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். எம்.எஸ். பட்டம் முடித்து டாக்டரான இவர், மருத்துவமனை நடத்தி வருகிறார். தற்போது கட்சியில் மாவட்ட மருத்துவ அணி செயலாளராக உள்ளார். இவருக்கு ஒரு மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.  

 

33. என்.ஆர். சிவபதி:

 

தமிழக விளை“ய”ட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர”க நியமிக்கப்பட்டுள்ள என்.ஆர். சிவபதி, திருச்சி ம”வட்டம் முசிறி சட்டப்பேரவை தெ”குதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள“ர். 48 வயதாகும் இவர் எம்.ஏ., பி.எல்., படித்த விவச”ய குடும்பத்தில் பிறந்தவர். முத்துர”ஜ” சமூகத்தை சேர்ந்தவர். இவர் செ”ந்த ஊர் திருச்சி ம”வட்டம் தெ”ட்டியம் அருகே உள்ள நத்தம் கிர”மம் ஆகும். இவருக்கு ச”ந்தி என்ற மனைவியும், ஜெயச”ந்தி, லட்சுமிபிரிய” என்ற இரு மகள்களும் உள்ளனர். கடந்த 1991 முதல் 1996 வரை அதிமுக எம்.எல்.ஏ வ”க பணிய”ற்றின”ர். கடந்த 25 ஆண்டுக”லம”க கட்சி பணிய”ற்றி வருகிற”ர். ஜெயலலித” பேரவையின் திருச்சி புறநகர் ம”வட்ட செயல”ளர், ம”நில ம”ணவரணி செயல”ளர், ம”நில இளைஞரணி செயல”ளர், எம்.ஜி.ஆர். மன்ற ம”நில இணை செயல”ளர் மற்றும் திருச்சி புறநகர் ம”வட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் ப”சறை பெ”றுப்ப”ளர”கவும் பணிய”ற்றி இருக்கிற”ர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்