முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மக்கள் இனி சுதந்திரமாக வாழ்வார்கள் - ஜெயலலிதா

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மே.17 - வாரம் ஒருமுறை நிருபர்களை சந்திப்பேன் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா கடந்த  5 ஆண்டுகளில் அச்ச உணர்வுடன் வாழ்ந்த தமிழக மக்கள் இனி சுந்தரமாக வாழ்வார்கள் என்று கூறியுள்ளார். தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்திலுள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் 6 கோப்புகளிலும், அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தனித்துறையை  உருவாக்க கோப்புகளிலும் கையெழுத்திட்டு பணியைத் தொடங்கினார். அதன்பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில்  அளித்தார்.

அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- அரசு கேபிள் டி.வி.  எப்போது தொடங்கப்படும்?

பதில்:- இன்று (நேற்று) தான் பதவி ஏற்று உள்ளேன். அதற்குள் எல்லாவற்றையும் நிறைவேற்ற முடியுமா? தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்தையும் நிறைவேற்றுவோம்.

கேள்வி:- அமைச்சரவையில் 10 அனுபவ மந்திரிகளும், 24 புதுமுகங்களும மந்திரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்களே?

பதில்:- பழைய மந்திரிகளும் புதிய அமைச்சர்களும் கலந்து தான் நியமித்து இருக்கிறேன். எல்லா மாவட்டத்திற்கும், மதத்திற்கும், ஜாதியினருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

கேள்வி:- நீங்கள் புனித ஜார்ஜ் கோட்டையில் பணியை துவக்கி உள்ளீர்கள்? புதிய தலைமை செயலகம் என்னவாகும்?

பதில்:- அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படும்.

கேள்வி:- முதல்வராக பதவி ஏற்று இருக்கும் நீங்கள் தமிழக மக்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

பதில்:- கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் நிர்வாகமே நடைபெறதா சூழ்நிலை அரசு நிர்வாகம் இல்லை. அரசு பணி நடக்கவில்லை. கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகம் வெறும் 5 ஆண்டு பின்னுக்கு செல்லவில்லை. கற்காலத்திற்கே வந்து  விட்டது. சுருக்கமாக சொல்லப்போனால் எல்லாமே சீரழிந்து போய் விட்டது. எனவே தமிழகத்தை மீண்டும் புதிதாக நிர்மணிக்கவேண்டும்.

விலைவாசியை குறைக்க, மின்வெட்டை சீர்செய்ய, சட்டம் ஒழுங்கு சீர்படுத்தவம், மேம்படுத்தவும் வேண்டும்.

தமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்துச்செல்ல ஏராளமான பணிகள் அனைத்திலும் புணரமைக்க வேண்டும்.

கடந்த காலத்தில் மக்கள் அச்ச உணர்வுடன் வாழ்ந்தனர். ஊடகங்கள் சுதந்திரமாக இல்லை. இனிமேல் சுதந்திரமாக வாழவும், தமிழகம் விடுதலை அடைந்து விட்டது.

நேற்று முதல் சங்கிலி பறிப்பு குறைந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். அந்த குற்ற வாலிபர்கள்  ஆந்திராவுக்கு ஓடி போயிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. படிப்படியாக நிலை மாறும் தமிழக மக்கள் இனி அச்சப்பட தேவையில்லை. வேலைக்கு செல்லும் கணவர் வீட்டுக்கு திரும்பும் போது மனைவி உயிருடன் இருப்பாரா என்று கவலைப்பட தேவையில்லை.

சூழ்நிலை மாறும் சட்டம் ஒழுங்கு செம்மையாகவும் தமிழகம் முதன்மை மாநிலமாக உயரும்.

கேள்வி:- எப்போது டெல்லி செல்வீர்கள்?

பதில்:- டெல்லிக்கு போவேன்.

கேள்வி:- தமிழகத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறியிருக்கிரே?

பதில்:- மங்களகரமாக வார்த்தையை சொன்னதற்கு நன்றி. தமிழகம் நிச்சயம் வளர்ச்சி அடையும்.

கேள்வி;- வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா?

பதில்:- அவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்படும்.

இவ்வாறு ஜெயலலிதா நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

 

 

வாரம் ஒருமுறை சந்திப்பேன் ஜெயலலிதா உறுதி

 

நேற்று சென்னையில் 7 கோப்புகளில் கையொழுத்திட்ட முதல்வர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது இனி நிருபர்களை பார்த்த இடத்தில் எல்லாம் பேட்டி கேட்ட கூடாது. இனி வாரத்திற்கு ஒரு முறை உங்களை (நிருபர்கள்0 சந்திப்பேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்