முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மே.- 18 - பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் பாதுகாப்பு உஷார் நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதிகள் உள்ளிட்டோரிடம் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க படையினர் அண்மையில் சுட்டுக் கொன்றதையடுத்து பின்லேடனுக்கு ஆதரவாக இருந்ததாக பாகிஸ்தான் மீது உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதையடுத்து நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கக் கூடும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. இதை உறுதி செய்வது போல பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் தலைவர் பாஷா அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தியாவின் ராணுவ தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி மற்றும் ராணுவ தளபதிகள் கலந்து கொண்ட கூட்டம் டெல்லியில் நடந்தது. 90 நிமிடங்கள் நடந்த இந்த கூட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான், இந்திய, சீன எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரு தரப்பு சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony