முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள எதிர்க்கட்சித் தலைவராக அச்சுதானந்தன் பொலிட் பீரோ கூட்டத்தில் முடிவு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மே.​ - 18 - கேரளத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அச்சுதானந்தனையும், மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சூர்யகாந்த் மிஸ்ராவையும் நியமிக்க மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.  மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து ஆராய மார்க்சிஸ்ட் கட்சியின் இரு நாள் பொலிட் பீரோ கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டது. கட்சியின் மத்திய குழு கூட்டம் ஜூன் 10 ம் தேதி தொடங்கவுள்ளது. காரணங்கள் குறித்து விரிவாக விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிட் பீரோ உறுப்பினர் பாந்தே தெரிவித்தார். மேற்கு வங்க கம்யூனிஸ்டு மூத்த தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்யா, பொலிட்பீரோவில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது பற்றி கேட்ட போது, அதிகாரபூர்வ தகவல் ஏதும் கிடைக்கவில்லை. புத்ததேவ் குறித்து வெளியான தகவலை வதந்தி என்று கட்சியின் மாநில செயலர் பீமன்போஸ் தெரிவித்துள்ளாரே என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony