முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க்குற்ற விசாரணை: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

புதன்கிழமை, 4 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், டிச. 5 _ இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதி கட்ட போர் நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். எனவே இலங்கை சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க்குற்றம் இழைத்ததாக ஐ.நா. மனித உரிமை கமிஷனில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. 

அதைத் தொடர்ந்து ராணுவத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றன. 

ஆனால் அதிபர் மகிந்த ராஜபக்சே சர்வதேச நாடுகளின் வேண்டுகோளை நிராகரித்து வருகிறார். 

அதைத் தொடர்ந்து இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை அரசுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்தள்ளது. 

வாஷிங்டனில் நேற்று முன் தினம் அமெரிக்க தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ராஜாங்க  அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாவது  _  

இலங்கையில் உள்நாட்டுப் போரில் இடம் பெற்ற கொடுமைகள் குறித்த குற்றச் சாட்டுகளுக்கு அரசு பதில் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இல்லாவிட்டால் இலங்கை அரசு மீது சர்வதேச நாடுகள் காட்டும் பொறுமை இழந்து விடும். குறிப்பாக பொறுப்பு கூறல் விவகாரங்களில் இலங்கை தனது நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும். 

மேலும், சர்வதேச நாடுகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதையே நாங்கள் விரும்புகிறோம். 

நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இலங்கை அரசால் அதை செய்ய முடியும் என நம்புகிறோம். 

விசாரணையில் உண்மையான நம்பகத்தன்மை இல்லாவிட்டால் இலங்கை மீதான அனைத்துலக சமூகத்தின் பொறுமை குறைய தொடங்கி விடும் . இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்