முக்கிய செய்திகள்

வீட்டுக்கு ஒரு நாய் - சீனாவில் வினோத சட்டம்

புதன்கிழமை, 18 மே 2011      உலகம்
china-map

 

பீஜிங், மே.19 - சீனாவில் மக்கள் தொகை மட்டுமல்ல நாய்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. மக்கள் தொகையை குறைக்க வீட்டுக்கு ஒரு குழந்தை என்று சட்டம் போட்ட சீனா நாய்களின் எண்ணிக்கையை குறைக்க வீட்டுக்க ஒரு நாய் என்ற வினோத சட்டத்தை அறிவித்துள்ளது. 

இந்த புதிய சட்டத்தால் சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் வெறி நாய்கடி பரவுவதை குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நகரில் மொத்த 8 லட்சம் நாய்கள் உள்ளன. இதில் 1லட்சத்து 40 ஆயிரம் நாய்களே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு  செய்ய அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பலர் தங்கள் நாய்களை பதிவு செய்வதில்லை. தற்போது பதிவுக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட நாய்களை வைத்திருப்போர் இந்த வாரத்திற்குள் பதிவு செய்தால் அவர்கள் மன்னிக்கப்படுவார்கள். இந்த புதிய வினோத சட்டத்தால் நடுத்தர மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: