முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனிப்புயல் - அமெரிக்காவில் 1900 விமானங்கள் ரத்து

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பெர்லின், டிச. 8 - ஐரோப்பா கண்டத்தில் சமீபத்தில் இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, போலந்து, தெற்கு ஸ்காண்டிநேவியா ஆகிய நாடுகளில் ஸாவர் என்ற சூறாவளிப் புயல் கடுமையாக தாக்கியது. 

சுமார் 5 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். ஆம்ஸ்டர்டாம், பெர்லின், ஹம்பர்க்  உள்ளிட்ட விமான நிலையங்கள் விமானங்களை ரத்து செய்தன. புயலுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். 

தற்போது இதனுடன் சேர்ந்து பனிப்புயலும் கடுமையாக தாக்குகிறது. கடுமையாக பனி கொட்டுகிறது. வடக்கு ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட கடல்களில் கடல் நீர் ஐஸ் கட்டிகளாக மாறி விட்டன. 

பனிப்புயலில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். பனிக் கட்டிகள் உறைந்து மூடிக் கிடப்பதால் இங்கு மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டு உள்ளது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். 

பனிப்புயல் கடுமையாக வீசுவதால் நேற்று முன் தினம் மட்டும் 1900 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் சிக்கி மக்கள் தவிக்கின்றனர். 

சாலைகளில் 3 இஞ்ச் உயரத்துக்கு பனி படர்ந்து கிடக்கிறது. இதனால் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. பனிப்புயலில் சிக்கி இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்