முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடியூரப்பா அரசுக்கு மெஜாரிட்டி இருக்கிறது - பரத்வாஜ்

புதன்கிழமை, 18 மே 2011      அரசியல்
Image Unavailable

பெங்களூர்,மே.19 - கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு மெஜாரிட்டி ஆதரவு இருக்கிறது என்று மாநில கவர்னர் பரத்வாஜ் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் கடந்த ஒரு வாரகாலமாக நிலவு வந்த அரசியல் நெருக்கடிக்கு முடிவு ஏற்பட்டது. கர்நாடகத்தில் கவர்னர் பரத்வாஜூக்கும் பா.ஜ. முதல்வர் எடியூரப்பாவுக்கும் மோதல் போக்கு நிலவு வந்தது. இந்த மோதல் போக்கு நீர்பூத்த நெருப்பாக இருந்தது. முதல்வர் எடியூரப்பா மீது நிலப்பேர ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது தொடர்பாக எடியூரப்பா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி கொடுத்தார். இதனால் அவர்களுக்கிடையே நிலவி வந்த மோதல் போக்கு வெளியே வந்தது. இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் 5 சுயேட்சைகள் உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறித்து செல்லாது என்று சுப்ரீம்கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதனால் எடியூரப்பாவுக்கு மெஜாரிட்டி கிடைத்துவிடுமோ என்று நினைத்த கவர்னர் பரத்வாஜ், மாநில சட்டம்-ஒழுங்கு மற்றும் அரசியல் நிலை குறித்து அஹிக்கை ஒன்று மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தார். மேலும் அந்த அறிக்கையில் எடியூரப்பா அரசை கலைக்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்திருந்தார். இதற்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்ததது. மேலும் கர்நாடக மாநில பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள்121 பேர் டெல்லி சென்றனர். அவர்கள் அனைவரும் கட்சியின் தலைவர் நிதீன்கட்காரி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் அணிவகுப்பு நடத்தினர். மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கை எல்.கே.அத்வானி சந்தித்து, எடியூரப்பா அரசை கலைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

பாரதிய ஜனதா முதல்வர் எடியூரப்பா தலைமையில் அந்த 121 எம்.எல்.ஏ.க்களும் நேற்று பெங்களூர் திரும்பினர். பெங்களூர் திரும்பியதும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, எனது அமைச்சரவை முடிவுப்படி வரும் ஜூன் 2-ம் தேதி சட்டசபையை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பாக கவர்னர் பரத்வாஜை விரைவில் சந்திப்பேன் என்றார். ஆனால் நேற்றே கவர்னரை எடியூரப்பா சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் கவர்னர் பரத்வாஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் முதல்வர் எடியூரப்பாவுக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்றார். எடியூரப்பா எனது நீண்டநாள் நண்பர். நான் சட்டப்படிதான் நடந்து வருகிறேன். சட்டம் எனக்கு நன்றாகவே தெரியும். நானும் மத்திய சட்ட அமைச்சராக பணியாற்றியவன். என்னை கவர்னர் பதவியில் இருந்து நீக்க முடியாது. சட்டப்படிதான் நடக்க வேண்டும் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும் என்றார். இதன்மூலம் கர்நாடகத்தில் கடந்த ஒருவார காலமாக நிலவிவந்த அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. பரத்வாஜ் பேட்டி அளிக்கும்போது முதல்வர் எடியூரப்பாவும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்