முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள முன்னாள் அமைச்சர் பரோலில் மீண்டும் விடுதலை

வெள்ளிக்கிழமை, 20 மே 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், மே.20 - ஊழல் குற்றச்சாட்டில் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளை மீண்டும் பரோலில் 10 நாட்கள் செல்ல கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. கேரள காங்கிரஸ்(பி) தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனையொட்டி அவர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். இந்தநிலையில் பாலகிருஷ்ணபிள்ளையின் மனைவி சுகவீனம் அடைந்துள்ளார். இதனையொட்டி பாலகிருஷ்ணபிள்ளைக்கு முதலில் பரோல் வழங்கப்பட்டது. தற்போது அவரது மனைவிக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் தனது மனைவியை பார்ப்பதற்காக பாலகிருஷ்ணபிள்ளைக்கு மீண்டும் 10 நாள் பரோலில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த 18-ம் தேதி அன்று கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பதவி ஏற்றது. காங்கிரஸ் கூட்டணியில் பாலகிருஷ்ண பிள்ளை தலைமையிலான கேரள காங்கிரசும் இடம் பெற்றுள்ளது. இந்த கட்சியை சேர்ந்தவரும் பாலகிருஷ்ணன் பிள்ளையின் மகனுமான கே.பி.கணேஷ் குமாருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் தனது மகன் அமைச்சர் பதவி ஏற்பதை பார்ப்பதற்காக பதவி ஏற்பு விழாவுக்கு முன்பு தன்னை விடுவிக்க வேண்டும் என்று பாலகிருஷ்ண பிள்ளை கோர்ட்டை கேட்டுக்கொண்டார். ஆனால் அவரை கோர்ட்டு நேற்றுதான் பரோலில் விடுதலை செய்தது. மகன், அமைச்சராக பதவி ஏற்பதை நேரில் பார்க்க வேண்டும் என்ற பாலகிருஷ்ண பிள்ளையின் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்