முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் 18 தொழிலாளர்கள் படுகொலை

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், டிச.15 - ஈராக் நாட்டுதொழிலாளர்கள் 18 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஈராக்கில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கிடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரான்_ஈராக் இடையே காஸ் குழாய் பதிக்கும் பணியில் தொழி லாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

பாக்தாத்தின் வடகிழக்குப் பகுதியில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. பலாட்ருஷ் என்ற இடத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம கும்பல் தொழிலாளர்கள் மீது சரமாரியாக சுட்டது. இதில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதில் 15 பேர் ஈரானை சேர்ந்தவர்கள். நீ பேர் ஈராக் நாட்டைச் சேர்நதவர்கள்.             

 

 

    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony