முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசிடம் ரூ.375 கோடி நிவாரணம் கேட்போம்: உம்மன்சாண்டி

வெள்ளிக்கிழமை, 20 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.20 - எண்டோசல்பான் பூச்சி கொல்லி மருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசிடம் ரூ.375 கோடி கேட்போம் என்று கேரள மாநில காங்கிரஸ் முதல்வர் உம்மன்சாண்டி கூறியுள்ளார். கேரள மாநிலத்தில் எண்டோசல்பான் பூச்சி கொல்லி மருந்தை விவசாயத்திற்கு பயன்படுத்தியதால் பலர் உயரிழந்தனர். மேலும் பலர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடுமட்டுமல்லாமல் மண்வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த மருத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேரள மாநிலம் கோரி வருகிறது. இதற்கு ஆதரவு பெருகி வருகிறது. 

இந்தநிலையில் கேரள மாநில காங்கிரஸ் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள உம்மன்சாண்டி நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க டெல்லி சென்றார். சந்திப்புக்கு முன்னர் உம்மன்சாண்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் கேரள மாநிலத்தில் எண்டோசல்பான் பூச்சி கொல்லி மருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.375 கோடி தருமாறு மத்திய அரசிடம் கேட்போம் என்றார். நிவாரணத்தொகை கொடுத்ததுபோக மீதம் உள்ள தொகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தரமுள்ள மருத்துவமனையும் கட்டப்படும். இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவிப்பேன். எண்டோசல்பான் பூச்சி மருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை கமிஷன் கூறியுள்ளது. அதை நிறைவேற்றப்படும் என்று உம்மன்சாண்டி மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்