முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி காந்த்துக்கு மிகச் சிறந்த இந்தியர் விருது

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.16 - ரஜினி காந்த்துக்கு மிகச் சிறந்த சிறந்த இந்தியர் விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். ஆன் லைனில் மிகச்சிறந்த 25 இந்தியர்கள் என்ற கருத்துக் கணிப்பை தனியார் டி.வி. நிறுவனம் நடத்தியது. 

இந்த கருத்து கணிப்பின் மீது பொது மக்கள் வாக்களித்தனர். இந்தியாவில் வாழும் சாதனையாளர்கள் மற்றும் பிரபலமானவர்கள் பெயர் அதில் இருந்தது. ரஜினிகாந்த்,  சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர். ரகுமான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், வகீதா ரகுமான், முகேஷ் அம்பானி உள்பட 25 பேர் மிகச்சிறந்த இந்தியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார். விழாவில் ரஜினி காந்த் பேசியதாவது:

எப்போதாவது அற்புதங்கள் நடக்கும். சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த நான் இவ்வளவு பெரிய வி.ஐ.பி.க்களின் நடுவில் இருக்கிறேன் என்றால் இது அற்புதமான விஷயம்தான். எனக்கு அம்மாவும், அப்பாவுமாக இருந்த எனது அண்ணன்  சத்திய நாராயணாராவ் கெய்க்வாட், என் குரு பாலசந்தர் மற்றும் தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்றார் ரஜினி.

                   

 

  

 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony