முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தப்பட்ட கலெக்டர்-என்ஜினீயிர் இன்று வீடு திருபம்புவார்கள் - பட்நாயக்

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

புவனேஷ்வர். பிப்.24 - மாவோயிஸ்டுகளால் கடத்தி செல்லப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட மாவட்டக்கலெக்டர் மற்றும் என்ஜினீயர் ஆகியோர் இன்று வீடு திரும்புவார்கள் என்று ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்  தெரிவித்துள்ளார். ஒரிஸ்ஸா மாநிலம் மல்கான்கிரி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.கிருஷ்ணா, என்ஜினீயர் பபிப்த்ரா ஆகியோர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டனர். இவர்களை விடுவிக்க மாவோயிஸ்டுகளுடன் மாநில அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து மாவோயிஸ்டுகளுடன் ஆந்திர மாநில பேராசிரியர்கள் இருவர் பேச்சு நடத்தினர்.
இதை அடுத்து  மாவட்டக்கலெக்டரையும் என்ஜினீயரையும் மாவோயிட்டுகள் நேற்று முன்தினம் விடதலை செய்தனர்.
விடுதலை செய்யப்பட்ட இவர்கள் இருவரும் இன்று வீடு திரும்புவார்கள் என்று ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார்.
கடத்தப்பட்ட அதிகாரிகள் இருவரையும் 48 மணி நேரத்திற்கு பத்திரமாக அனுப்பிவைப்பதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மாவோயிட்டுகள் தெரிவித்தனர். எனவே அவர்கள் இருவரும் இன்று பத்திரமாக வீடு திரும்புவார்கள் என்று ஒரிஸ்ஸா சட்டசபையில் முதல்வர் பட்நாயக் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்தார்.
தூதர்களுடன் மாநில அரசு தொடர்ந்து பேச்சு நடத்தியதாகவும் அதில் முன்னேற்றம் ஏற்பட்டு இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
ஜர்பாடா சிறையில் நக்சலைட்டு தலைவர் காந்தி பிரசாதத்துடன் ஆந்திர பேராசிரியர்கள் பேச்சு நடத்தினார்கள் என்றும் அவ்ர தெரிவித்தார்.
மாவோயிஸ்டுகள் 14 கோரிக்கைகளை முன்வைத்தார்கள் என்றும் அதில் ஏற்புடையதை ஏற்பது என்று அரசு உறுதி அளித்திருப்பதாகவும் அவ்ர கூறினார்.
கலெக்டரும் என்ஜினீயரும் 48 மணி நேரத்திஹ்குள் வீடு திரும்புவார்கள் என்று விடுதலை பேச்சில் ஈடுபட்ட ஆந்திர பேராசிரியர் ஹர்கோபாலும் தெரிரித்துள்ளார்.
நேற்றுமுன்தினமே விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என்ற தான் சொன்னதற்காக வருத்தப்படுவதாகவும் விடுதலையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் இந்த விடுதலையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும்  வரவரா ராவ்  என்ற இன்னொரு ஆந்திர பேராசிரியர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!