முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் பட்டியலில் தவறு - ப.சிதம்பரம்

வெள்ளிக்கிழமை, 20 மே 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, மே.20 - பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் தவறு நடந்துவிட்டதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கருதப்படும் 50 தீவிரவாதிகள் பட்டியலை பாகிஸ்தானிடம் இந்திய அரசு ஒப்படைத்தது. இந்த பட்டியலில் 2003ம் ஆண்டு மும்பை ரயில் குண்டு வெடிப்பு போன்ஹ சம்பவங்களில் தொடர்புடைய வாசூல்கான் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் வாசூல்கான் ற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானதும், அவர் தற்போது மும்பை புறநகர் பகுதியான தானேயில் வசிப்பதும் தெரிய வந்தது. அவரது பேட்டியும் பத்திரிக்கைகளில் வெளியானது. இந்தியாவில் வசிக்கும் ஒருவர் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது அம்பலமானதால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

இதுகுறித்து டெல்லியில் பேட்டியளித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது, தீவிரவாதிகள் பட்டியல் தயாரிப்பில் தவறு நடந்துவிட்டதாகவும், வாசூல்கானின் பெயர் தேடப்படுவோர் பட்டியலில் இடம் பெற்றதற்கு மும்பை போலீசார் செய்த தவறு மற்றும் உளவுபிரிவு அதிகாரிகளின் கவனக்குறைவும் தான் காரணம். இந்த தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். வாசூல்கான் கைதுசெய்யப்பட்டதுகுறித்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் மும்பை போலீஸ் உளவு பிரிவுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். ஆனால் மார்ச் மாதம் தயாரிக்கப்பட்ட தேடுவோர் பட்டியலில் இந்த விவரம் சரிபார்க்கப்படவில்லை. கடந்த மே 21 ம் தேதி வாசூல்கான் கைது செய்யப்பட்ட விவரம் முறையாக தெரிவிக்கப்படாததால் சி.பி.ஐ. அமைப்பால் தேடுவோர் பட்டியலில் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. இப்போது சி.பி.ஐ. முதல் இன்டர்போல் வரை அனைத்து அமைப்புகளுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து  சி.பி.ஐ.யின் தேடுவோர் பட்டியலில் இருந்து வந்த வாசூல்கான் பெயர் நீக்கப்பட்டு விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்