முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மருத்துவமனையில் துளைவழி அறுவை சிகிச்சை

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 18 - சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா முயற்சியால் 

துளைவழி அறுவை சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியினால் இந்தியாவிலே முதன்முறையாக சென்னை அரசு மருத்துவமனையில் துளைவழி அறுவை சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சிகிச்சை பிரிவை நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். மருத்துவத்துறையில் முதல்வர் ஜெயலலிதா செய்த சாதனைகளை அமைச்சர் பட்டயலிட்டார்.

சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் துளைவழி அறுவை சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதுபோன்ற ஒரு பிரிவு எந்த மாநிலத்திலும் அரசு மருத்துவமனையில் அமைக்கப்படவில்லை.

துளைவழி அறுவை சிகிச்சை பிரிவு அரசு மருத்துவமனையில் அமைத்த மாநில தமிழகம் தான். மத்திய அரசு நடத்தும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த பிரிவு உள்ளது. அதற்கு அடுத்த இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அரசு மருத்துவமனையில் இந்த பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவை திறந்து வைத்து பேசினார். அப்போது மருத்துவத்துறையில் ஜெயலலிதா ஏற்படுத்திய புதிய சாதனைகள், திட்டங்களை பெருமிதத்துடன் எடுத்து கூறினார்.

இவ்விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:_

சென்னை மாநகரம் இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக மாற்ற முதல்வர் ஜெயலலிதா முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டிருக்கிறார். மருத்துவத் துறையை மகத்தான துறையாக உருவாக்கி இருக்கிறார். மருத்துவ பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதல்வர் ஜெயலிலதா பேசியபோது, புதிய பெல்லோஷிப் படிப்பு அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி இன்று (நேற்று) இந்த புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தை அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக்க முதல்வர் ஜெயலலிதா உறுதிபூண்டு செயல்பட்டு வருகிறார்.

இன்று இந்தியாவில் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத அளவுக்கு இந்த பிரிவு முதன்முதலாக இங்கு துவக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு உயர்ந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பம். இன்று இந்த புதிய பிரிவு துவக்கப்பட்டதன் மூலம் ஏழை மக்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைக்கும். முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 5 லட்சத்து 45 ஆயிரத்து 240 பேர் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் மட்டும் இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர். இதன் மூலம் 418 கோடி ரூபாயை அரசு மருத்துவமனைகள் ஈட்டியுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை, சென்னையில் இந்த அரசு மருத்துவமனை மட்டும் 67 கோடியே 43 லட்சம் ரூபாய் ஈட்டியுள்ளது. இதில் 55 கோடி ரூபாய் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உபகரணங்கள் வாங்க பயன்படுத்தப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு இந்த ஆண்டு 6511 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார். கிராமப்புறங்களிலும் நல்ல சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகளை முதல்வர் செய்துள்ளார். அங்கும் உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். குழந்தை பராமரிப்பு, அவசர சிகிச்சை, 24 மணி நேர பிரசவ வார்டு என அனைத்து வசதியும் செய்து கொடுத்திருப்பதால் இன்று மருத்துவத் துறை வேகமாக மக்களுக்கு சேவை செய்து வருகிறது.

முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள், திட்டத்தின் மூலம் இன்று குழந்தைகள் இறப்பு விகிதம் 1000_க்கு 21 என்ற அளவில் குறைந்துள்ளது. பேறு காலத்தில் தாய்மார்கள் இறக்கும் நிலை 1 லட்சத்துக்கு 73 என்ற அளவில் குறைந்துள்ளது. இதுபோன்ற மருத்துவத்துறையில் முதல்வர் ஜெயலலிதா செய்து சாதனைகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

இவ்விழாவில் சுகாதாரத்துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், பொது அறுவை சிகிச்சைத் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் எஸ்.தெய்வநாயகம் ஆகியோர் பேசினர். விழாவிற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கனகசபை தலைமை தாங்கினார்.

துளைவழி அறுவை சிகிச்சை பிரிவில் டாக்டர் பட்டம் பெற்ற இணை பேராசிரியர் டாக்டர் பு.பாலாஜி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்