முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுகவினர் இன்று முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.டிச.19 - மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் இன்று முதல் தாக்கல் செய்யலாம். தற்போது, பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஏற்கனவே அதிமுக மக்களவை தேர்தல் பணியை முன்கூட்டியே துவக்கியுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுவை 40 மக்களவை தொகுதிகளிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறைகளின் பிரச்சார கூட்டங்களும், நிர்வாகிகள் கூட்டமும் நடந்து, நிர்வாகிகளுக்கு பயிற்சிகளும் தரப்பட்டுள்ளன. ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வெற்றியானது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை எழுப்பியுள்ளன. இச்சூழலில் இன்று அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் நடக்கிறது. அதேபோல இன்று முதல் 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பும் விருப்ப மனுக்களை அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் இன்று முதல் தாக்கல் செய்யும் பணி நடைபெறுகிறது. 

இது குறித்து ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், தமிழ் நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அதிமுக

சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற அதிமுக தொண்டர்கள் தலைமைக் கழகத்தில் வருகின்ற 19.12.2013 வியாழக்கிழமை முதல் 27.12.2013 வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். 

கட்டணம்:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பிற்கு இணங்க, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற அதிமுக தொண்டர்கள் தலைமைக் கழகத்தில் வருகின்ற 19.12.2013 முதல் 27.12.2013 வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை, விண்ணப்பக் கட்டணமாக 25,000_ ரூபாய் செலுத்தி வேட்பு மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பொதுக்குழு கூட்டம்

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் முதல் கட்சியாக அ.தி.மு.க. களம் இறங்கியிருக்கிறது. விருப்பமனு வாங்கும் அதே நாளில், (19_ந் தேதி) மதியம் 3 மணிக்கு சென்னையை அடுத்த வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுவதால் காலையில் அ.தி.மு.க. தலைமையகத்தில் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகல் மட்டும் விருப்ப மனுக்களை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நாளை முதல் விருப்ப மனுக்களை அளிப்பவர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏராளமானோர் தங்கள், தங்கள் தொகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்றும் விருப்ப மனுக்களை செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்