முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியப் தூதர் கைது பின்னணியில் சதிதிட்டம்: குர்ஷித்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், டிச. 19 -  நியூயார்க்கில் இந்தியப் பெண் தூதர் மீதான கைது நடவடிக்கையின் பின்னணியில் சதிதிட்டம் உள்ளதாக, மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷில் விளக்கம் அளித்தபோது, இந்தியத் தூதரக அதிகாரிகளின் மதிப்பை நிலைநிறுத்துவதில் மத்திய அரசு நேரடியாகத் தலையிட்டு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றார்.

அமெரிக்காவில் இந்தியத் துணைத் தூதர் தேவயானி மீதான கைது நடவடிக்கையின் பின்னணியில் சதிதிட்டம் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்த விவகாரத்தில் இந்தியா மிகையான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

நியூயார்க்கில் கைது நடவடிக்கைக்கு ஆளான பெண் தூதரக அதிகாரியின் மதிப்பைக் காப்பது தமது பொறுப்பு என்றும அவர் உறுதியளித்தார்.முன்னதாக, அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டைகளை உடனடியாக தரவேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டது.

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த விமான நிலையத்துக்கான 'பாஸ்' அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சாலையில் தடுப்புகளை வைத்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இப்போது எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, அந்த தடுப்புகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. அந்த தூதரகம் அமைந்துள்ள பாதையை பொது போக்குவரத்துக்கு போலீஸார் திறந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை 'பழிவாங்கல்' என அமெரிக்க ஊடகங்கள் வருணித்துள்ளது கவனிக்கத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்