முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் தலைமையில் இணைப் பதிவாளர்கள் கூட்டம்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.19  - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில்

* 2013_14ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் கூட்டுறவுச் சங்கங்களில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ள  கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து          ரூ.10.42 கோடி நிதியுதவி

* 1.4.2011 முதல் 14.12.2013 வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ.10,589.35 கோடி  அளவி.ற்கு பயிர்க்கடன்கள்

* மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் 3.77 கோடி கடனுதவி.

* 1.4.2011 முதல் 30.112013 வரை ரூ.14,000 கோடி வைப்புத் தொகை சேகரிப்பு

* கூட்டுறவு வங்கிகளில் வைப்புத் தொகை ரூ.5690 கோடி சேகரிப்பு.

* கூட்டுறவுச் சங்கங்களில் வேளாண் விளைபொருள்கள் ரூ.367 கோடி விற்பனை ஆகியவை முடிவு செய்யப்பட்டன.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் 18.12.2013 அன்று, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்ட அரங்கில், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள், கூட்டுறவு விற்பனை இணையங்கள், கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோர்களின்  ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், " முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, கூட்டுறவுத்துறை அமைச்சரால் 2013_14_ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது 100 கூட்டுறவுச் சங்கங்களில் பல்வேறு வகையான திட்டப்பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.10.42 கோடி, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று (18.12.13) இரும்பு கதவுடன் கூடிய பாதுகாப்பு அறை கட்டுவதற்கு 42 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு ரூ.1,93,95,481/_ம், 20 கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு ரூ.1,20,20,712/_ம், கணினி எடை மேடை அமைக்க 3 கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு ரூ.56,66,376/_ம், சரிய சக்தி கொப்பரை உலர்கலன் நிறுவ 3 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு ரூ.17,67,000/_ம், 7 மத்திய கூட்டுறவு அச்சங்கங்களுக்கு நவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ரூ.3,68,23,290/_ம், 6 தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகளுக்கு, அலுவலகக் கட்டடம் மற்றும் சில்லரை விற்பனை வளாகம் கட்டுவதற்கு ரூ.1,13,90,000/_ம் ஆக மொத்தம் 81 கூட்டுறவுச் சங்கங்களுக்கு ரூ.8,70,62,859/_க்கான நிதியுதவி  அமைச்சரால் வழங்கப்பட்டது. எஞ்சியுள்ள 19 கூட்டுறவுச் சங்கங்களில் 4 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாகைளுக்கு, சுயசேவைப் பிரிவு நவீனமயமாக்க ரூ.79,40,000/_ம், இரும்பு கதவுடன் கூடிய பாதுகாப்பு அறை கட்ட 8 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு ரூ.38,99,102/_ம், 5 கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு ரூ.25,32,000/_ம், 2 கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகளுக்கு நகரும் நியாயவிலைக் கடைகளாக செயல்படுவதற்கு வாகனம் வாங்க ரூ.27,40,000/_ம் ஆக மொத்தம் 19 பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களுக்கு ரூ.1,71,11,102/_க்கான நிதியுதவி ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது என்பதை அமைச்சர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, தற்போது வடகிழக்குப் பருவமழை திருப்திகரமாக உள்ளதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக பயிர்க் கடன்கள் எளிதாக வழங்கவும், உரம், விதை, பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருள்களை உடனுக்குடன் வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், விவசாயிகளுக்குத் தேவையான இதர கடனுதவிகளை தாமதமின்றி முன்னுரிமை கொடுத்து  வழங்கவும்,  இதில் எவ்விதப் புகாருக்கும் இடமின்றி செயல்படுமாறும் அறிவுறுத்தினார்.

இதற்காகத்தான் மாநிலம் முழுவதும் டிஏபி உரம், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வேளாண் பெருமக்களுக்குத் தேவையான அளவில் உரிய நேரத்தில் கிடைக்க தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு வழங்கும் வட்டியில்லாக் கடன் ரூ.135.50 கோடியிலிருந்து ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110_ன் கீழ்  அறிவித்த அறிவிப்பிற்கிணங்க முதற்கட்டமாக 72 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் வாழ்திறனை அதிகரிக்க ஒவ்வொரு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்திற்கும் தலா ரூ.50 இலட்சம் வீதம் ரூ.36 கோடி சிறப்பு காசுக் கடன் அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இச்சங்கங்களின் வியாபாரத் தன்மையை ரூ.2 கோடிக்கு மேல் உயர்த்த அமைச்சர், அலுவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார். 

1.4.2006 முதல் 31.3.2011 வரையிலான 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்கள் ரூ.9,163.60 கோடியாகும், 1.4.2011 முதல் 14.12.2013 வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன்கள் ரூ.10,589.35 கோடி அளவிற்கு வழங்கப்பட்டுள்ளன. 

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பேசுகையில், ஏழை, எளிய மக்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய  நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறு வணிகக் கடன்கள் வழங்குவதற்கு நடப்பாண்டில் ரூ.55 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில் 30.11.2013 வரை 35,542 நபர்களுக்கு ரூ.33.23 கோடி அளவிற்கு இக்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று  தெரிவித்தார்.

1.4.2013 முதல் 31.3.2013 வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலமாக ரூ.92,556 கோடி அளவிற்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

1.4.2011 அன்று அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் இருந்த வைப்புத் தொகை ரூ.26,245 கோடியாகும். ஆனால், 30.11.2013ம் தேதிப்படி கூட்டுறவு நிறுவனங்களிலுள்ள வைப்புத் தொகை ரூ.40,245 கோடியாகும். அதாவது 1.4.2011 முதல் 30.112013 வரை ரூ.14,000 கோடி வைப்புத் தொகை உயர்ந்துள்ளது. இது கூட்டுறவு வங்கிகள் மீது பொதுமக்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு இதுவே சான்று என அமைச்சர் பெருமையுடன் தெரிவித்துக் கொண்டார்.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு அடைய நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பாண்டில் ரூ.6.00 கோடி அளவிற்கு கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு  30.11.2013 வரை 1,027 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3.77 கோடி அளவிற்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. குறியீட்டினை  எய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உடனுக்குடன் கடனுதவிகளை வழங்க அலுவலர்களைக் கேட்டுக்கொண்டார்.

தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம் உறுப்பினர்களுக்கு நகைக்கடன் வழங்க நடப்பாண்டில் ரூ.1,000 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில் 2013 நவம்பர் வரை 1,62,927 பயனாளிகளுக்கு ரூ.588.98 கோடி அளவில் நகைக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், நகரக் கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு வகையான கடன்களை வழங்கிட நடப்பாண்டில் ரூ.7,251 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில் 30.11.2013 வரை ரூ.3,732.34 கோடி கடனுதவி வழங்கப்பட்டு 9,83,567 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

அமைச்சர் 50 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு பாதுகாப்புக் கதவுடன் கூடிய பாதுகாப்பு அறை கட்டித்தரப்படும் என சட்டமன்றப் பேரவையில் அறிவித்த அறிவிப்பின்படி 26 மண்டலங்களிலிருந்து வரப்பெற்ற முன்மொழிவுகள் அடிப்படையில் 50 சங்கங்களுக்கு பாதுகாப்பு கதவுடன் கூடிய பாதுகாப்பு அறை கட்டுவதற்கான தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இப்பணியினை நடப்பாண்டிற்குள் விரைந்து முடிக்க அமைச்சர் அலுவலர்களைக் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியானது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுடன் உடனுக்குடன் பணப்பரிமாற்றம்  செய்து கொள்ள ஏதுவாக மின்னணு வங்கியியல் சேவை 4,527 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும், 180 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளிலும்  நடப்பாண்டில் செயல்பட்டு வருகிறது . 

கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் சட்டமன்ற பேரவை அறிவிப்பின்படி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகளில் 2000 மாற்றுத்திறனாளி உறுப்பினர்களுக்கு பங்கு மூலதன நிதியுதவியை மானியமாக வழங்க அறிவித்ததையொட்டி, 30.11.2013 வரை 617 பயனாளிகளுக்கு ரூ.227.43 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுபோலவே, மகளிர் உறுப்பினர்களுக்கு தலா ரூ. 2,500 வீதம் பங்கு மூலதன மானியமாக 525 பயனாளிகளுக்கு ரூ.198.53 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

நகரக் கூட்டுறவு வங்கிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உறுப்பினர்களுக்கு பங்கு மூலதன மானியமாக ரூ.2,500 வீதம் 312 நபர்களுக்கு ரூ.70.92 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் விளைபொருள்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் மூலம் விற்பனை செய்வதற்கு நடப்பாண்டில் ரூ.780 கோடி குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு 30.11.2013 வரை ரூ.367 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 112 வேளாண் விற்பனைச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்குத் தானிய ஈட்டுக் கடன் வழங்க நடப்பாண்டில் ரூ.98 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில்  10,207 பயனாளிகளுக்கு ரூ.43 கோடி அளவிற்கு தானிய ஈட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் வியாபாரம் முன்னேற்றம் அடைய வேண்டி நடப்பு ஆண்டில் ரூ.130 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில் 30.11.2013 வரை ரூ.72 கோடி அளவிற்கு வியாபாரம் ஈட்டியுள்ளது. மலைவாழ் மக்களால் விளைவிக்கப்படும் சாமை, வரகு மற்றும் சேகரிக்கப்படும் தேன், புளி ஆகிய பொருள்கள் பதப்படுத்தாமலேயே இடைத்தரகர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால், அவர்களின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெறாத நிலை இருந்தது. இந்நிலையை மாற்றும் பொருட்டு முதல்வர் ஜெயலலிதா மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து பொது வணிக முத்திரையிட்டு விற்பனை செய்வதற்கு வழிவகுத்துள்ளார்கள். இத்திட்டத்தினால் மலைவாழ் மக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு உரிய விலையினை உடனுக்குடன் பெற்றிட முடிகிறது. நுகர்வோருக்கும் நியாயமான விலையில் தரமான பொருள்கள் கிடைக்கப் பெறுகின்றன.

மலைவாழ் மக்கள் வசிக்கும் இருப்பிடங்களுக்கே சென்று அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்திட பெரும்பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு 10 வாகனங்கள் வழங்கி, நகரும் நியாயவிலைக் கடைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

விவசாயிகள் அவர்கள் விளைவித்த விளைபொருள்களுக்கு ஆதாய விலை கிடைக்கும் வகையில் பொருள்களை பாதுகாப்பாக வைக்கவும், அதன் மீது தானிய <ட்டுக் கடன் வழங்கவும் 2,87,700 மெட்ரிக் டன் கொள்திறன் கொண்ட 2,273 கிடங்குகள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதாவால் ரூ.235.86 கோடி மானியம் வழங்க திட்டமிட்டு, இதில் 1,403 கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டுள்ளது . மேலும், 691 கிடங்குகள் விரைவில் திறக்கப்பட உள்ளன என்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பெருமையுடன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களிலுள்ள கிடங்குகள், சேமிப்பு கிடங்கு வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தரச் சான்று (ஹஉஉசநனயைவ+டி&) பெற்று அதன் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் பல்வேறு சலுகைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அமைச்சர் தெரிவித்தார்.

பொதுவிநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கூட்டுறவுச் சங்கங்களும், கூட்டுறவு நிறுவனங்களும் பெரும் பங்காற்றி வருகின்றன. அத்தியாவசியப் பொருள்களை பதுக்கி கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு சிறப்பு பொதுவிநியோகத் திட்ட பொருள்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய நேரத்தில்  வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.   

வெளிச்சந்தை விலையினைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன்  குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வீதம் துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் போன்ற மளிகைப் பொருள்கள் மிகக் குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் அவர்களுக்கு அரசின் திட்டங்கள் அனைத்தும் சேரும் வகையில் சீரிய முறையில் செயல்படுத்தி அனைவரும் பயன்பெற முழு <டுபாட்டுடன் செயல்படுவதோடு, முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி கூட்டுறவுத்துறை அனைத்து செயல்பாட்டிலும் முதலிடம் வகிக்கத் தக்க வகையில் திட்டங்கள் வகுத்து திறம்பட செயலாற்றிட அமைச்சர் துறை அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைச் செயலாளர் எம்.பி.நிர்மலா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பெ.சீத்தாராமன், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் அ.அமுதா அருணாச்சலம், கூடுதல் பதிவாளர்கள் க.இராஜேந்திரன், இரா.கார்த்திகேயன், ம.ப.சிவன் அருள், இராம ஜெயம்பாண்டியன், கா.பிரமிளா மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago