முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விற்பானை யாளர்கள் 24-ல் வேலை நிறுத்தம்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,டிச.19 - பெட்ரோல்,டீசலுக்கு கமிஷனை உயர்த்தக்கோரி வரும் 24_ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்களும் மூடப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோல்,டீசல் விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஹைதர் அலி தெரிவித்துள்ளார். 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுதான் நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இதனால் வங்கி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மற்றொரு அதிர்ச்சி மக்களுக்கு காத்திருக்கிறது. பெட்ரோல்,பங்க்கள் மூடப்படும் என்பதுதான் அந்த அதிர்ச்சி. அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு வழங்கப்படும் கமிஷனை உயர்த்தக்கோரி இந்த ஒரு நாள் ஸ்டிரைக் நடக்கிறது. இந்த கமிஷன் உயர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு கமிஷனை உயர்த்தும்படி ஏற்கனவே பரிந்துரை செய்துவிட்டது. ஆனால் அதை மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் அமுல்படுத்தவில்லை. இதைக்கண்டித்து வருகிற 24_ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் ஒருநாள் மூடப்படும் என்று அந்த சங்கத்தின் தலைவர் ஹைதர் அலி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் பெட்ரோல்,டீசலுக்கு கமிஷனை உயர்த்தக்கோரி நாங்கள் பல ஆண்டுகளாக கோரி வருகிறோம். இதனையொட்டி கடந்த 2010_ம் ஆண்டு மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்த குழுவானது கமிஷன் தொகையை உயர்தத்க்கோரி மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது. ஆனால் இது இன்னும் அமுல்படுத்தப்படவில்லை. இதைக்கண்டித்து வருகின்ற 22,23 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பெட்ரோல் பங்க்குகளில் லைட்கள் அணைக்கப்படும். 24_ம் தேதி பெட்ரோல் பங்க்குகள் முழு அடைப்பில் இருக்கும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்