முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர்: திருத்த மசோதா தாக்கல்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி, டிச.19 - பழங்குடியினர் பட்டியலில் "நரிக்குறவர் " ஜாதியை சேர்க்க வகை செய்யும் அரசிலமைப்புச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய துறை அமைச்சர் கிஷோர்சந்திர தேவ் அறிமுகம் செய்தார். இந்த சட்டத் திருத்த மசோதாவில், பழங்குடியினர் பட்டியிலில் தமிழகத்தில் இருந்து " நரிக்குறவர் " ஜாதியும், சத்தீஸ்கரில் இருந்து தனுஹர், தனுவார் ஆகிய இரு ஜாதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து, முறைப்படி இந்த மசோதா மக்களவையிலும், அதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு, குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் தெரிவிப்பார். அதன் பிறகு, மேற்கண்ட மூன்று ஜாதிகளும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுதற்கான ஆணை மத்திய அரசிதழில் வெளியாகும். அரசிலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவில் நரிகுறவர் ஜாதியை சேர்க்கக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் தமிழகத்தில் நரிக்குறவன் அல்லது நரிக்குறவர் அல்லது குருவிக்காரன் என அழைக்கப்படும் நாடோடி பழங்குடி மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஏழ்மை நிலையில் உள்ள இந்த வகுப்பினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 342 (1), 342 (2)-ன் கீழ் அனைத்து உத்தரவாதங்களையும் வழங்குவது அவசரத் தேவையாகும். ஆகவே, இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தாங்கள் தலையிட்டு தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது தமிழகத்தில் பழங்குடியினர் பட்டியலில் 36 ஜாதிகளும், சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலில் 42 ஜாதிகளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்