முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்திய மூர்த்திபவனில் காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் அமளி

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.20 - சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் அமளி ஏற்பட்டது.  முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு ஆதரவாளர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்..

தமிழக காங்கிரசுக்கு புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். 

தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பட்டியலை அண்மையில் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். இந்த பட்டியலில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட் டுள்ளதாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.

கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்க புதிய நிர்வாகிகள் அவசர கூட்டம்  நேற்று   கூட்டப்பட்டது. 

சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று காலை 10 மணிக்கு இக்கூட்டம் துவங்கியது. 12 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில்  நேற்று  நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.பி.க்கள், பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், கந்தசாமி, மாநில நிர்வாகிகள் சக்தி வடிவேலு, சாருபாலா தொண்டைமான், கே.சிரஞ்சீவி, ஆர்.தாமோதரன், நாசே ராமச்சந்திரன், விடியல், சேகர், சி.டி.மெய்யப்பன், விஷ்ணுபிரசாத், தாம்பரம் நாராயணன், தணிகாசலம் மற்றும் என்.ரங்கபாஷ்யம், சிதம்பரம் ஜேம்ஸ், விஜயகுமார் உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தங்கபாலு ஆதரவாளர்கள் திடீரென எழுந்து கோஷம் போட்டனர். மத்திய அமைச்சர்கள், முன்னாள் காங்கிரஸ் தலைவர்களை அழைக்காமல் கூட்டம் நடத்துவதா என கண்டன குரல் எழுப்பினார்கள். சிறு குழுவை வைத்து கூட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் செல்லாது என கூச்சல் போட்டு ரகளையில் <டுபட்டனர். 

பிறகு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்து விட்டு ஆர்.தாமோதரன், டி.எல்.சிவலிங்கம், சுந்தர வடிவேலு, கணபதி உள்ளிட்ட தங்கபாலு ஆதரவாளர்கள் வெளியேறினர். அதன் பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்தது.வெளிநடப்பு செய்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வற்புறுத்தி பேசினர். 

அப்போது, சிதம்பரம் உள்பட முக்கிய நிர்வாகிகள் அழைக்கப்படாததை கண்டித்து 10 பேர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணியில் இருந்து தி.மு.க வெளியேறியது மற்றும் தேர்தல் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்